நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானில் சுற்றுப் பயணிகளுக்கு அனுமதி: பிரதமர் கிஷிடா அறிவிப்பு 

டோக்கியோ: 

ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால்  உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. தத்தம் நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அந்த வகையில் ஜப்பானும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை ஜப்பான் நீக்கியுள்ளது.

10 Best Japan Tourist Attractions - Japan Web Magazine

47 Top Attractions in Japan's 47 Prefectures | tsunagu Japan

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறும்போது,

“அடுத்த மாதம் 10-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டப்பட்ட விதிமுறைகளின்படி சுற்றுலா பயணிகளின் அனுமதி வழங்குகிறோம். இதனைத் தொடர்ந்து நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலும், ஒகினாவாவில் உள்ள நஹா விமான நிலையத்திலும் சர்வதேச விமானங்கள் ஜூன் மாதம் முதல் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். படிப்படியாக சுற்றுலா பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு சுற்றுலா வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும், பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டிருக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. 

ஜப்பானில் இதுவரை 83 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset