நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமீரகத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படும் பிரத்யேக மாம்பழத் திருவிழா 

ஷார்ஜா:

ஷார்ஜா எமிரேட் எக்ஸ்போ கோர் ஃபக்கானில் ‘Mango Festival’ என்ற மாம்பழ விழாவின் நான்காவது பதிப்பினை நடத்தவுள்ளது. வருகின்ற ஜூன் 27 முதல் 29 வரை நடைபெறும் இந்த மாம்பழ விழாவில் பல்வேறு வகையான மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. 

ஷார்ஜா வர்த்தக மற்றும் தொழில்துறை சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள உள்ளூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட பல்வேறு வகையான மாம்பழங்களை காட்சிப்படுத்தும் என்று கூறப்படுகின்றது. 

மாம்பழ பருவத்தைக் கொண்டாடும் அதே வேளையில் நாட்டின் விவசாயத் துறையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில் விவசாயிகளுக்கான ஒர்க் ஷாப்கள் மற்றும் விவசாயத்தில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கான போட்டிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஏமன் மாம்பழம் – ஒரு கிலோவிற்கு 10 திர்ஹம்ஸ்

அல்போன்சா மாம்பழம் – ஒரு பெட்டிக்கு 35–45 திர்ஹம்ஸ்

பெருவியன் மாம்பழம் – ஒரு கிலோ 35 திர்ஹம்ஸ் அல்லது ஒரு பெட்டிக்கு 90–110 திர்ஹம்ஸ்

கொலம்பிய மினி மாம்பழம் – ஒரு பெட்டி 90–100 திர்ஹம்ஸ்

கம்போடியன்  சீன மாம்பழம் – ஒரு கிலோ 18 திர்ஹம்ஸ் போன்றவை இடம்பெறும்.

இது குறித்து கோர் ஃபக்கான் நகராட்சி மன்ற உறுப்பினர் முகமது கல்ஃபான் அல்நக்பி பேசுகையில், இந்த நிகழ்வில் உள்ளூர் விவசாயிகள் மற்றும் நிபுணர்களின் பரந்த பங்கேற்பு, குடும்பங்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் கல்வி நடவடிக்கைகள் ஆகியவை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். 

வலுவான அரசாங்க ஆதரவு மற்றும் சமூக ஈடுபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த ஆண்டு மாம்பழ விழா அதிக கூட்டத்தை ஈர்க்கும் என்றும், விவசாய சிறப்பிற்கான மையமாக ஷார்ஜாவின் நிலையை மேலும் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம்: கலீஜ் டைம்ஸ் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset