
செய்திகள் உலகம்
துபாயில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது
துபாய்:
துபாயில் வசிப்பவர்களுக்கு எமிரேட்ஸ் ஐடிக்கு அடுத்தபடியாக ஓட்டுநர் உரிமம் ஒரு முக்கியமான ஆவணமாகும். நகரம் ஒரு வலுவான பொது போக்குவரத்து அமைப்பைக் கொண்டிருந்தாலும், ஓட்டுநர் உரிமம் ஒப்பிடமுடியாத நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. மேலும் பரந்த வேலை வாய்ப்புகளையும் அணுக அனுமதிக்கிறது. இத்தகைய அத்தியாவசியமான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம். ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கத் தேவையான ஆவணங்கள், கட்டணங்கள் உட்பட அனைத்து விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்:
செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி
கண் பரிசோதனை
கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை (விண்ணப்பதாரரின் தொழில் ஓட்டுநர் என பட்டியலிடப்பட்டிருந்தால்)
21 வயதுக்குட்பட்டவர்களுக்கு கட்டண விவரங்கள்:
லைசென்ஸ் புதுப்பித்தல்: 100 திர்ஹம்ஸ்
அறிவு மற்றும் புதுமை கட்டணம் (knowledge and innovation fees): 20 திர்ஹம்ஸ்
கண் பரிசோதனை: 140 திர்ஹம்ஸ் முதல் 180 திர்ஹம்ஸ் வரை
லைசென்ஸ் புதுப்பிக்க மற்றும் கண் பரிசோதனைக்கு மொபைல் ட்ரக் சர்வீசிற்கு விண்ணப்பித்தால் கூடுதலாக 500 திர்ஹம் செலுத்த வேண்டும்.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டண விவரங்கள்:
லைசென்ஸ் புதுப்பித்தல்: 300 திர்ஹம்ஸ்
அறிவு மற்றும் புதுமை கட்டணம் (knowledge and innovation fees): 20 திர்ஹம்ஸ்
கண் பரிசோதனை: 140 திர்ஹம்ஸ் முதல் 180 திர்ஹம்ஸ் வரை
லைசென்ஸ் புதுப்பிக்க மற்றும் கண் பரிசோதனைக்கு மொபைல் ட்ரக் சர்வீசிற்கு விண்ணப்பித்தால் கூடுதலாக 500 திர்ஹம் செலுத்த வேண்டும்.
புதுப்பித்தல் செய்வதற்கான தளங்கள் விவரங்கள்:
ஆன்லைன் வழியாக RTA வலைத்தளம் அல்லது RTA ஸ்மார்ட் ஆப்
‘Dubai Now ‘ போன்ற அப்ளிகேஷன்கள்
சுய சேவை கியோஸ்க்குகள் (kiosks)
ஓட்டுநர் நிறுவனங்கள்
சுய சேவை கியோஸ்க்குகளின் இருப்பிடங்கள்
1. வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் (உம் ரமூல், தேரா, அல் பர்ஷா, அல் மனாரா, அல் த்வார், அல் கிஃபாஃப்)
2. தஸ்ஜீல் (அல் தவார், அல் குசைஸ், பர்ஷா)
3. ஷாமில் (முஹைஸ்னா)
4. வாஸல் வாகன சோதனை (அல் ஜதாஃப்)
5. தமாம் வாகன சோதனை
ஆதாரம்: கலீஜ் டைம்ஸ்
தொடர்புடைய செய்திகள்
May 28, 2025, 3:40 pm
55 வயதில் 31-ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி காமி ரீட்டா சாதனை
May 27, 2025, 6:13 pm
சீனாவில் 30 லட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு
May 27, 2025, 2:02 pm
அமீரகத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படும் பிரத்யேக மாம்பழத் திருவிழா
May 25, 2025, 1:12 pm
‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி கொன்றுவரும் இஸ்ரேல் ராணுவம்’
May 25, 2025, 11:39 am