நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஞானவாபி வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

புது டெல்லி:

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள ஹிந்து தெய்வங்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் ஹிந்து பக்தர்கள் தொடுத்துள்ள வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த், பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து கூறியதாவது:

ஞானவாபி மசூதி வழக்கை விசாரித்து வந்த சிவில் நீதிமன்ற நீதிபதி மீது எந்தப் புகாரோ குறையோ இல்லை. இருப்பினும், வழக்கின் தீவிரத்தை உணர்ந்து நீதித் துறையில் 25-30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம். இதனால், இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அயோத்தி பிரச்னைக்குப் பிறகு புதிதாக எந்த வழிபாட்டு இடத்தைக் குறித்தும் சர்ச்சை எழுப்புவதை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடை செய்கிறது என்று மசூதி தரப்பினர் விசாரணையின்போது வாதிட்டனர்.

இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுத் தலத்தின் மதம் சார்ந்த விஷயங்களைக் குறித்து உறுதி செய்து கொள்வதை, 1991-இல் இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடுக்கவில்லை என்று நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

இந்நிலையில், ஞானவாபி மசூதியில் பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சோதனைக்கு பிறகு முஸ்லிம்கள் தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset