
செய்திகள் இந்தியா
ரயில்வே துறையில் வேலைக்காக லஞ்சமாக நிலம்: லாலு பிரசாத் மீது சிபிஐ புதிய பதிவு
புது டெல்லி:
ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதற்கு கைமாறாக 1 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான நிலத்தை லஞ்சமாக பெற்றதாக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து அவரது இல்லத்தில் சோதனை நடத்தியது.
ஏற்கெனவே மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த லாலு பிரசாத் யாதவ், தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார்.
அப்போது ரயில்வேயில் குரூப்-டி பணிகளை வாங்கித் தருவதற்கு பலரின் நிலத்தை லாலு மற்றும் அவரின் குடும்பத்தினர் லஞ்சமாக பெற்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
அதுகுறித்து ஆரம்பக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் குரூப்-டி பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களை, விண்ணப்பம் அளித்த 3 நாள்களுக்குள் நியமன வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ரயில்வே அதிகாரிகள் அவசரகதியில் பணியமர்த்தியதும், பின்னர் அவர்களின் பணி முறைப்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
இதற்கு கைமாறாக பணியர்த்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான நிலத்தை லாலுவின் மனைவி ராப்ரி தேவி, அவரின் மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோர் சந்தை விலையைவிட குறைந்து விலைக்கு வாங்கியுள்ளனர்.
இதுபோல் பாட்னாவில் சுமார் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை தங்களுக்குச் சொந்தமானதாக அவர்கள் மாற்றியுள்ளனர். இந்த நிலத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4.39 கோடி ஆகும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சிபிஐயின் வழக்குப்பதிவு செய்து லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ், ரயில்வேயில் பணியர்த்தப்பட்ட 12 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குத் தொடர்பாக தில்லியிலும் பிகாரிலும் லாலு பிரசாத் யாதவ், அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இதர நபர்களுக்குத் தொடர்புள்ள 16 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 11:22 pm
நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் நகராக அறிவிப்பு
July 3, 2022, 6:56 pm
நுபுர் சர்மாவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் அளித்த கடும் கண்டனங்கள்: முழு விவரம்
July 3, 2022, 5:01 pm
இந்தியாவுக்கு 1.75 பில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்
July 1, 2022, 8:19 pm
கேரளத்தில் ஆந்த்ராக்ஸ் பரவல்
July 1, 2022, 8:13 pm
பான் கார்டு-ஆதார் எண் இணைப்புக்கு இன்று முதல் ரூ.1,000 அபராதம்
July 1, 2022, 7:54 pm
இந்திய அரசின் மொத்த கடன் அதிகரிப்பு
July 1, 2022, 12:04 am
ராஜஸ்தான் தையல்காரர் கொலை வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்
June 30, 2022, 10:52 pm