நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலங்கை தொடர்பான செய்தி கிட் சியாங்கிடம் போலீஸ் விசாரணை

கோலாலம்பூர் - 

இலங்கை தொடர்பான செய்தி குறித்து ஜசெக மூத்த தலைவரிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் அந்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் அங்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையிடம் இருந்து மலேசியா பாடம் கற்றுக் கொள்ள முடியுமா என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது.

லிம் கிட் சியாங் வெளியிட்டதாக கூறி இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் கிட் சியாங்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச்செய்தி தொடர்பான போலீசார் லிம் கிட் சியாங்கிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விசாரணைகள் முடிந்த பின் இதன் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ்படையில் குற்ற புலனாய்வு பிரிவின் இயக்குநர் அப்துல் ஜலில் ஹசான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset