செய்திகள் மலேசியா
தைப்பூச விழாவில் சட்டவிரோத வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பலூன்கள் வெடித்தன: இரண்டு நகராண்மைக் கழக அதிகாரிகள் காயம்
ஜார்ஜ்டவுன்:
தைப்பூச கொண்டாட்டப் பகுதியில் சட்டவிரோத வியாபாரிகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கையின் போது நேற்று இரவு கைப்பற்றப்பட்ட பலூன் திடீரென வெடித்து தீப்பிடித்ததில் பினாங்கு மாநகர் மன்றத்தின் இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.
இங்குள்ள யூனியன் தெருவில் உள்ள மாநகர் மன்றத்தின் உரிமப் பிரிவு அதிகாரிகள் பிக்கப் டிரக்கிலிருந்து பலூன்களை அகற்றிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இரவு 10.45 மணியளவில் ஜாலான் கெபூன் பூங்காவில் உள்ள ஒரு வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஒரு வணிகரிடமிருந்து பலூன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பின்னர் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.
வர்த்தகர் பலூன்களில் ஹைட்ரஜன் வாயுவை நிரப்பியதாக நம்பப்படுகிறது.
இது ஹீலியத்தை விட மலிவானது. எரியக்கூடியது. ஆனால் இந்த விவகாரம் குறித்த விசாரணை இன்னும் நடந்து வருவதால் மேலும் கருத்து தெரிவிக்கப்படவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2026, 2:17 pm
காரில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக 2 ஆண்கள் கைது: போலிஸ்
February 2, 2026, 1:28 pm
ஆலயம் தொடர்பான சர்ச்சைகளில் மோதல்கள் முஸ்லிம்களின் வழி அல்ல: ஃபஹ்மி
February 2, 2026, 1:22 pm
குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டை ஒரு முக்கியமான தேசியப் பிரச்சினையாகக் கருத வேண்டும்: சார்லஸ்
February 1, 2026, 8:46 pm
பத்துமலையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பேன்: கோபிந்த் சிங்
February 1, 2026, 8:45 pm
பத்துமலையின் மேம்பாட்டிற்காக இறுதி மூச்சு வரை உழைப்பேன்: டான்ஸ்ரீ நடராஜா
February 1, 2026, 8:44 pm
டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்
February 1, 2026, 10:49 am
