நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையின் மேம்பாட்டிற்காக இறுதி மூச்சு வரை உழைப்பேன்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலையின் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்காக இறுதி மூச்சு வரை உழைப்பேன்.

இதில் எந்த வீண் பழிகள் வந்தாலும் எனக்கு  கவலையில்லை என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்தார்.

அவருடன் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் ஆகியோரும் வருகை தந்தனர்.

மின் படிக்கட்டு திட்டம் தொடர்பாக சிலாங்கூர் மாநில அரசும் கோவில் நிர்வாகமும் நல்ல முறையில் பேசி தீர்வு காணும் படி பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் கோபிந்த் சிங் டியோ இந்த மின் படிக்கட்டு திட்டம் நிறைவேற பெரிதும் உதவ வேண்டும் என்று டன்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

இதனிடையே கோபிந்த் சிங் டியோ பதவி ஏற்று இந்த இரண்டு வருடத்தில் இரண்டு மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தந்துள்ளார்.

இந்த தருணத்தில் அவருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இந்திய சமுதாயத்திற்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset