செய்திகள் மலேசியா
கம்போங் கபாயாங் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலயத்தின் 130ஆம் ஆண்டு தைப்பூச விழா; கோலாகலமாக நடைபெற்றது: பொன். விக்ரமன்
ஈப்போ:
பேரா, கம்போங் கபாயாங் குகையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தில் 130 ஆண்டு தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது.
பேரா மாநிலத்தில் பதினோரு ஆலயங்களில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
அதில் ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்திற்கு அடுத்து அதிகமான பக்தர்கள் திரளும் ஆலயமாக கோப்பெங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கம்போங் கப்பாயாங் அருள் மிகு சிவசுப்பிரமணியர் ஆலயம் விளங்குகிறது.
இந்த ஆண்டு எதிபாராத அளவிற்கு மக்கள் கூட்டம் கூடிதாக ஆலயப் பொருளாளர் பொன். விக்ரமன் கூறினார்.
கூடுதல் விடுமுறை நாட்களில் இந்த ஆண்டு தைப்பூச விழா நடைபெறுவதால் அதிகமான பக்தர்கள், சுற்றுப் பயணிகள் வருகை தந்ததாக குறிப்பிட்டார்.
தைப்பூச விழா சமய வழிபாட்டுமுறையில் கொண்டாடப்படும் விழா, ஆகவே ஆலய விதிகளுக்கு ஏற்ப பக்தர்கள் இந்த விழாவை கொண்டாடினர்
பக்தர்கள் நேற்று நள்ளிரவு முதல் கொண்டு காவடி, பால் குடம் ஏந்தி தங்களின் காணிக்கையை் செலுத்தத் தொடங்கினர்.
இன்றும் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் காணிக்கை செலுத்தியதாக பொன். விக்ரமன் கூறினார்.
வழக்கமாக தைப்பூச நாளன்று சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் விழாவன்று ஆலயத்தில் கூடுவர்.
இந்த ஆண்டு எதிர்பாரத்தபடி சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் திரண்டதாக குறிப்பிட்டார்.
சுற்றுப் பயணிகளை கவரும் குகை பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் மேலும் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ள பல திட்டங்கள் வரையப்பட்டுள்ளது.
இதற்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவினை வழங்கவேண்டும் என்று வலிறுத்தினார்.
இந்த விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் மானியம் வழங்குவதாக அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2026, 2:17 pm
காரில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக 2 ஆண்கள் கைது: போலிஸ்
February 2, 2026, 1:28 pm
ஆலயம் தொடர்பான சர்ச்சைகளில் மோதல்கள் முஸ்லிம்களின் வழி அல்ல: ஃபஹ்மி
February 2, 2026, 1:22 pm
குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டை ஒரு முக்கியமான தேசியப் பிரச்சினையாகக் கருத வேண்டும்: சார்லஸ்
February 1, 2026, 8:46 pm
பத்துமலையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பேன்: கோபிந்த் சிங்
February 1, 2026, 8:45 pm
பத்துமலையின் மேம்பாட்டிற்காக இறுதி மூச்சு வரை உழைப்பேன்: டான்ஸ்ரீ நடராஜா
February 1, 2026, 8:44 pm
டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்
February 1, 2026, 10:49 am
