நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மனிதவள அமைச்சுடன் இணைந்து செயல்பட அமெரிக்க தொழிலாளர்துறை தயாராக உள்ளது: டத்தோஸ்ரீ எம். சரவணன்

வாஷிங்டன்:

மனிவள அமைச்சுடன் இணைந்து செயல்பட அமெரிக்க தொழிலாளர்துறை தயாராக உள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப பரிமாற்றம், திறன் மேம்பாடு, பயிற்சி திட்டங்கள் போன்றவற்றில் இந்த கூட்டமைப்பு அமையவுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

அமெரிக்க - ஆசிய நாடுகளுக்கான உச்ச நிலை மாநாடு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில் பிரதமருடன் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணனும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அமெரிக்காவின் பல இலாகாக்களுடன் அவர் சந்திப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அதில் அமெரிக்க தொழிலாளர்துறை மற்றும் அனைத்துலக மனிதவள விவகாரப் பிரிவின் துணை செயலாளரான தியா லீயை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

May be an image of 10 people, people sitting and people standing

அச் சந்திப்பின் போது மலேசியாவில் மனிதவள அமைச்சு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக் கூறப்பட்டது.

அதிக வேலை, ஊதியத்தை நிறுத்தி வைப்பது ஆவணங்களைத் தடுத்து நிறுத்துதல் போன்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பால் பட்டியலிடப்பட்டுள்ள கட்டாய உழைப்பின் கிட்டத்தட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் நிவர்த்தி செய்வதில் மனிதவள அமைச்சகத்தின் முன்முயற்சியை அமைச்சர் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். 

இந்த வழிகாட்டு நெறிமுறையின்படி பார்த்தால் தொடர்புடைய பெரும்பாலான வழக்குகள் கடன் அடிமைத்தனம் என்ற புள்ளியில் இணைகின்றன. அதைத்தான் அவை சுட்டிக்காட்டுகின்றன. இது சர்வதேச மட்டத்தில்  நிகழும் ஓர்  அறைகூவல். ஆனால், மலேசியா போன்ற நாட்டில் இது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

May be an image of 5 people, people sitting and people standing

மேலும், இந்தக் கலந்துரையாடல்கள் விளைவாக தொழில்நுட்ப பரிமாற்றம், திறன் மேம்பாடு, பயிற்சித் திட்டங்களில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள அமெரிக்கா தொழிலாளர்துறை ஒப்புக்கொண்டுள்ளது. 

உண்மையில், அமெரிக்க தொழிற்சங்கங்களின் முக்கியத்துவத்தைப் போன்று தொழிலாளர்களுக்கு மலேசியா வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க ஆள்பலத்துறை பரிந்துரைத்துள்ளது. 

2022 ஜூலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தொழிற்சங்கச் சட்டம் 1959-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு இணங்க இது உள்ளது என்று டத்தோஸ்ரீ சரவணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset