செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆம்பூரில் பிரியாணித் திருவிழா நாளை துவங்குகிறது
ஆம்பூர்:
ஆம்பூர் பிரியாணி, ஆளைத்தூக்கும் அளவுக்கு கமகமக்கும். ஆம்பூர் பிரியாணியை ருசிக்கவே நாக்கிற்குக் கொடுப்பினை இருக்க வேண்டும் என்பார்கள் அசைவப் பிரியர்கள்.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியிலிருக்கும் அனைத்து பிரியாணிக் கடைகளையும் ஒன்றுசேர்த்து, பிரியாணித் திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்.
ஆம்பூர் வர்த்தக மையத்தில், வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. 13-ம் தேதியான வெள்ளிக்கிழமையும், 14-ஆம் தேதியான சனிக்கிழமையன்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருவிழா நடக்கிறது.

அதேபோல, 16-ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அன்றைய நாளில் மட்டும் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பிரியாணியை ருசித்து சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
30-க்கும் மேற்பட்ட அரங்குகள், 20-க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா களைகட்டவிருக்கிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். நுழைவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘‘மனித ஒருமைப்பாட்டுக்காக பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் மகிழ்ச்சியாகக் கூடி ஆளுக்கொரு பிடி எடுத்து சாப்பிட ரெடியா?’’ என அழைப்பு விடுத்திருக்கிறார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா.
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 9:14 pm
3,665 காவலர் பணியிடங்களுக்கு 2.25 லட்சம் இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்
November 8, 2025, 5:23 pm
பெண்களுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
November 5, 2025, 5:08 pm
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
November 4, 2025, 5:04 pm
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
