செய்திகள் தமிழ் தொடர்புகள்
இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரிய வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னை:
அதிமுக-வில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த ஜூலையில் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கை நிராகரித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சூரிய மூர்த்தி சார்பில் வழக்கறிஞர் அனில் குமார் மீண்டும் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று (ஜனவரி.9) நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வு விசாரித்தது.
அதன்படி இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக சூரியமூர்த்தி தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 10, 2026, 1:20 pm
ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால் விரைவு ரயில்கள் நிறுத்தம்
January 9, 2026, 1:38 pm
தமிழகத்தில் இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
January 7, 2026, 8:17 pm
பாமக சார்பில் அன்புமணி கூட்டணி பேச்சில் ஈடுபடுவது சட்ட விரோதம்: ராமதாஸ் கடும் கண்டனம்
January 7, 2026, 11:10 am
சென்னையில் சிங்கப்பூர் நூல்கள் வெளியீடு
January 4, 2026, 6:03 pm
தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்: செங்கோட்டையன் பேட்டி
January 4, 2026, 4:05 pm
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும்: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
January 4, 2026, 10:58 am
அதிமுகவில் விருப்ப மனு அளித்த 7,988 பேர்: 9ஆம் தேதி முதல் பழனிசாமி நேர்காணல்
January 3, 2026, 6:59 am
சென்னையில் சிங்கப்பூர் நூல்கள் வெளியீடு
January 2, 2026, 5:23 pm
