நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் சிங்கப்பூர் நூல்கள் வெளியீடு

சென்னை: 

நாளை 04.01.26 ஞாயிறு மாலை 
6 மணியளவில் சென்னை கவிக்கோ மன்றத்தில் தமிழ் நாடு தமிழ் வளர்ச்சிக்குழுத் தலைவர்
மா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் 
சிங்கப்பூர் நாணய மாற்றுத் தொழில் பற்றி முஸ்தபா அவர்கள் எழுதிய "சேஞ்ச் அலி "
நூலை எழுத்தாளர் பொருளியல் அறிஞர் முனைவர் சோம வள்ளியப்பன் ஆய்வுரை வழங்கி நூல் அறிமுகம் செய்கிறார்.

காலம் சென்ற சிங்கப்பூர் வரலாற்று ஆய்வாளர் பால பாஸ்கரன் எழுதிய  சிங்கப்பூர் - மலேசிய இதழியல் 1875-1941 நூலை சென்னை வளர்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் ஆ .இரா .வெங்கடாசலபதி அவர்கள் ஆய்வுரை வழங்கி அறிமுகம் செய்கிறார்.

பாலபாஸ்கரனின் "சொப்பனங்கள் நனவாகும் சொர்ண பூமி " நூலை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அறிமுகம் செய்கிறார். 

ஷா நவாஸ் எழுதிய ருசி பேதம் நூலை கவிஞர் எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் அறிமுகம் செய்கிறார் .

இந்த நிகழ்வில் தமிழ் நாடு அரசு திட்டக் குழுத் துணை தலைவர் ஜெயரஞ்சன்,  புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் சமஸ், கோம்பை அன்வர் ஆகியோர் கலந்து  கொள்கிறார்.

சிங்கப்பூர் ரஹ்மத் முஸ்தபா பவுண்டேஷன் ஆதரவில் நடைபெறும் இந் நிகழ்வுக்கு அனுமதி இலவசம். அனைவரும் வருக என்று ஏற்பாட்டுக் குழுவினர் கூறியுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset