நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அதிமுகவில் விருப்ப மனு அளித்த 7,988 பேர்: 9ஆம் தேதி முதல் பழனிசாமி நேர்காணல்

சென்னை:

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 7,988 பேரிடம் பொதுச்செயலாளர் பழனிசாமி வரும் ஜன.9-ம் தேதி முதல் நேர்காணல் நடத்த உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அதிமுக, இத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களிடம் கடந்த டிச.15 முதல் 23-ம் தேதி வரையும், 28 முதல் 31-ம் தேதி வரையும் விருப்ப மனுக்களை பெற்றது. 

இதில் மொத்தம் 10 ஆயிரத்து 175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதில் 2,187 மனுக்கள், பொதுச்செயலாளர் பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும், தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டி 7,988 மனுக்களும் பெறப்பட்டன.

இந்நிலையில், இவர்களிடம் ஜன.9 முதல் 13-ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட பழனிசாமி திட்டமிட்டுள்ளார். 

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் ஜன.9 முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், விருப்ப மனு அளித்தவர்களின் தொகுதி, வெற்றி வாய்ப்பு நிலவரங்களை அறிய, விருப்ப மனு அளித்தவர்கள் மட்டும், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல், நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset