செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் 09/01/2026 முதல் 14/01/2026 வரையில், சென்னையிலிருந்து நாள்தோறும் வழக்கமாக இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 10,245 சிறப்புப் பேருந்துகள் என ஆறு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 22,797 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாள்களுக்கு 11,290 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number), 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.
பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 7:19 am
புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா: கட்சிக் கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
