நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவில் வீட்டு, வாகனக் கடனுக்கான வட்டி கடுமையாக உயருகிறது

மும்பை: 

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) 4.40 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

இதனால், தனிநபர் கடன், வீடு, வாகனக் கடன் ஆகியவற்றுக்கான வட்டி அதிகரிக்கவுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளது.

இதற்கு அதிகரித்து வரும் பண வீக்கமே காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 3 மாதங்களாக அதிகரித்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி, 4.40 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இந்த வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset