செய்திகள் வணிகம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையேறினாலும் மலேசிய இந்தியா நகை வணிகர்கள் விலை ஏற்றவில்லை: டத்தோ அப்துல் ரசூல்
கோலாலம்பூர்:
அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.
இந்நிலையில், நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் கடந்த 2 நாட்களாகவே தங்கம் விலை சரிந்தது. 2 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரிங்கிட் 265/- ஆக குறைந்தது. அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை குறைந்ததால் அந்த நாளில் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அட்சய திருதியைக்கு மறு நாளே நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில், இன்று தங்கம் விலை இந்திய சந்தையில் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து மலேசிய இந்தியர் நகை வணிகர்கள் சங்கத் தலைவர் டத்தோ அப்துல் ரசூலிடம் வினவியதற்கு, "சர்வதேச சந்தையிலும் இந்திய சந்தையிலும் விலை உயர்ந்தது உண்மைதான். இருப்பினும் மலேசிய ஆபரணத் தங்க விலையை நாங்கள் ஏற்றவில்லை. பழைய சந்தை விலைக்கே எங்கள் வர்த்தகர்கள் விற்று வருகிறார்கள்.
"அதாவது, ரிங்கிட் 268க்கு விற்றுக் கொண்டிருந்த ஒரு கிராம் தங்கம், ரிங்கிட் 265க்கு நிலை நிறுத்தி உள்ளோம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் முன்பு சவரன் 2144 ரிங்கிட்டுக்கு விற்றது. இப்போது 2120க்கே மலேசிய இந்திய நகை வணிகர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்" என்று விளக்கமளித்துள்ளார்.
எனினும், ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 8:30 pm
திமோர் லெஸ்தேவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சரின் மலேசிய வருகை முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும்
October 24, 2025, 3:53 pm
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
October 23, 2025, 5:29 pm
ரோபோக்கள் அல்ல இனி கோபோட்கள்: அமேசானில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
October 21, 2025, 10:24 pm
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
