நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திண்டுக்கலில் உள்ள AMWAY இந்தியாவின்  ரூ.757 கோடி சொத்துகள் முடக்கம்

புது டெல்லி:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள "ஆம்வே இந்தியா' நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.757 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

ஆம்வே இந்தியா என்டர்பிரைசஸ் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமாக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள நிலம் மற்றும் ஆலை, அங்குள்ள வாகனங்கள், இயந்திரங்கள், வங்கிக் கணக்குகள், நிரந்தர வைப்புகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆம்வே நிறுவனத்துக்குச் சொந்தமான மொத்தம் ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துகள் கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளன.

எம்எல்எம் மார்க்கெட்டிங் முறையில் தங்களிடம் பொருள்களை வாங்குபவர்களை வைத்தே இந்த நிறுவனம் தொடர்ந்து பொருள்களை விற்பனை செய்து வந்தது.

இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. மேலும், இந்த நிறுவனம் தயாரிக்கும் பொருள்கள், சந்தையில் ஏற்கெனவே உள்ள அதே மாதிரியான பொருள்களைவிட மிக அதிக விலைக்கு விற்பனை செய்தும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.

பொருள்களின் பயன்களைக் கூறி சந்தைப்படுத்தாமல், ஆம்வேயில் உறுப்பினராகி பொருள்களை விற்பனை செய்தால் விரைவில் பெரிய பணக்காரர் ஆகலாம் என்று கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

"சட்டத்துக்கு உள்பட்டே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இப்போது கூறப்படும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என்று அந்த நிறுவனம் பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset