செய்திகள் தமிழ் தொடர்புகள்
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி வரை கனமழை பெய்யும்
சென்னை:
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வரும் 15-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதியில் நிலவுகிறது. அதன் தாக்கத்தால் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழகம் – இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 11, 12-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும்,13, 14, 15-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும், 11-ம்தேதி மேற்கண்ட பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 3:44 pm
மதுரை கயல்விழியைக் கரம்பிடித்த கைலாய மாப்பிள்ளை
April 27, 2026, 9:45 pm
புதுச்சேரியில் ஃபிரெஞ்சு மொழி நீக்கம்: ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு வைகோ கடும் கண்டனம்
April 27, 2026, 5:37 pm
திருச்சியில் பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை
April 27, 2026, 4:51 pm
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதும் மக்கள்
April 26, 2026, 10:02 pm
தமிழகத்தில் ஏப்.30 முதல் மே 2 வரை கனமழைக்கு வாய்ப்பு
April 25, 2026, 4:49 pm
கைதிகளை அழைத்துச் செல்லும் போலீஸ் வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள்
April 25, 2026, 4:11 pm
பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு இன்னும் ஓராண்டுக்கு தடை: தமிழக அரசு உத்தரவு
April 24, 2026, 1:04 pm
