செய்திகள் தமிழ் தொடர்புகள்
இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை: பலத்த மழைக்கு வாய்ப்பு
சென்னை:
சென்னையில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி இன்று (நவ.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (செவ்வாய்க் கிழமை) காலை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 4 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 2.4 செ.மீ, நந்தனத்தில் 4.5 செ.மீ, அண்ணா பல்கலையில் 4.4 செ.மீ, தரமணியில் 4.0 செ.மீ என மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 மணி நேரத்துக்கு ஒருமுறை வானிலை முன்னறிவிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல், அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையில் விட்டுவிட்டு இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் குறுகிய நேரத்தில் 20 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:29 pm
பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்: அவருக்கு வயது 90
September 10, 2026, 12:11 pm
தம்பி விஜய்யின் சைகையையும் மிசாவின் கைது குறித்தும் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீட்டு விளக்கம்
September 10, 2026, 10:41 am
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்றிரவு லண்டன் புறப்படுகிறார்
September 9, 2026, 10:04 pm
தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயமானது
September 9, 2026, 1:23 pm
22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு
September 7, 2026, 10:06 pm
இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
September 5, 2026, 10:07 pm
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
September 3, 2026, 3:14 pm
