நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை; இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு: ஜெயக்குமார்

சென்னை: 

பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது: 

திமுகவை போல ஒரு மறைமுக கூட்டணியை எப்போதும் அதிமுக பின்பற்றுவது கிடையாது. திமுகவை போல உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்பது அதிமுகவில் கிடையாது. எடுத்த முடிவு எடுத்த முடிவு தான். பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. கட்சியின் இந்த நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. இதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கியுள்ளார். ஆனால் ஊடகங்கள் அதை திசை திருப்பி இருக்கின்றன, அது உண்மை இல்லை.

பிரதமரை எந்த அமைச்சராவது நேரில் சென்று பார்த்திருக்கிறார்களா?. பிரதமர் முதல்வர்களை சந்திப்பதே மிகவும் அரிது, அதிலும் குறிப்பாக சில முதல்வர்களை மட்டும்தான் பிரதமர் சந்திப்பார். குறிப்பாக அமைச்சர்களை பார்த்த வரலாறே கிடையாது. ஆனால் உதயநிதி, பிரதமர் மோடியை சென்று சந்திக்கிறார் என்றால் எந்த அளவுக்கு மறைமுக கூட்டணி இருக்கிறது.

திமுக என்கிற மக்கள் விரோத சக்தியை விரட்டி அடிக்க வேண்டும். அந்த வகையில் பாஜகவைத் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒத்த கருத்தோடு வரும்போது, இது குறித்து கட்சியும் பொதுச் செயலாளரும் முடிவு செய்வார்கள். இதைத்தான் எடப்பாடியும் தெரிவித்தார். 

ஆனால் அது திரித்து கூறப்பட்டுள்ளது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset