நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தெலுங்கர்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவு

சென்னை: 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 4ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்த பேச்சு அனைத்து தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது.

கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இதுதொடர்பாக அவர் மீது ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டன. இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் படி எழும்பூர் போலீசார், நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம் நடிகை கஸ்தூரி பேச்சால் இரு சமூதாயங்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவுவதால், அவரிடம் அவதூறாக பேசியது தொடர்பாக நேரில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து சம்மன் வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு எழும்பூர் போலீசார் சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை என்பதால் அவரது செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் போலீசார் சம்மனை வீட்டு சுவற்றில் ஒட்டினர். மேலும் நடிகை கஸ்தூரி போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து தலைமைறவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை எழும்பூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset