நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை-புருனை நேரடி விமான சேவை தொடக்கம்

சென்னை:

சென்னை-புருனை இடையே நேரடி விமான சேவையை 'ராயல் புருனை ஏர்லைன்ஸ்' தொடங்கியது.

சென்னையிலிருந்து புருனைக்குப் பயணிக்க சிங்கப்பூர் அல்லது மலேசியா வழியாகத்தான் செல்ல வேண்டியதாகாக இருந்தது.

தற்போது சென்னையிலிருந்து புருனை தாருஸ்ஸலாம் செல்ல நேரடி விமான சேவை வாரத்தில் மூன்று நாட்கள் தொடங்கப்படும் என்று ராயல் புருனை ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இந்த சேவைகள் இயக்கப்படும் என்றும், இதன்மூலம் மெல்பர்ன், சிட்னி போன்ற ஆஸ்திரேலிய மாநகரங்களுக்கும் இணைப்பு விமான சேவை வழங்கப்படுகிறது என்றும் அந்த ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

புருனை வாழ் இந்தியர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களே அதிகம் உள்ளதால் அவர்களுக்கு இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset