நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,039-வது சதய விழா இன்று தொடங்கியது 

தஞ்சாவூர்: 

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,039-வது சதய விழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு விழா இன்று காலை 8.30 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கியது.  

பழநி ஆதீனம் குருமகா சன்னிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கினார்.

தொடர்ந்து, கருத்தரங்கம், நாத சங்கமம், 1,039 பேர் பங்கேற்கும் பரத நாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம், ‘சதய நாயகன் ராஜராஜன்’ வரலாற்று நாடகம் நடைபெற உள்ளன. 

நாளை காலை கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை பண்ணுடன் 100-க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகம் நடைபெறும். மாலையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன் வீதியுலா நடைபெறும்.

பின்னர் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சிறப்புரை ஆற்றுகின்றனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், சதய விழா குழு, அரண்மனை தேவஸ்தானம் ஆகியவை இணைந்து செய்து வருகின்றன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset