நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

டெபிட் கார்டே இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்

மும்பை: 

வங்கி ஏடிஎம்களிலும் டெபிட் கார்டே பயன்படுத்தாமல் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையி்ல் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், "ஏற்கெனவே மின்னணு முறையில் பணப்பரிமாற்றத்துக்கு யுபிஐ தொழில்நுட்பம் பரவலாக பயன்பாட்டில் உள்ளது.

"செல்போன், இணையவழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அனைவருமே இந்த யுபிஐ ஐடியை வைத்துள்ளனர்.

"இப்போது அதனைப் பயன்படுத்தி அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு இல்லாமல் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset