செய்திகள் உலகம்
இலங்கையில் உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை: பெட்ரோல் ரூ.254, டீசல் 176 விற்பனை
கொழும்பு:
இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77ம், டீசல் விலை ரூ.55ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை எப்போதும் இல்லாத வகையில் லிட்டர் ரூ. 254ஆகவும், டீசல் ரூ.176ஆகவும் விற்கப்படுகிறது.
சிலோன் பெட்ரோலியம் நிறுவனத்தின் (சிபிசி) தலைவர் சுமித் விஜேசிங்க கூறுகையில், "கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் கடந்த 10ம் தேதி முதல் டீசல் லிட்டருக்கு ரூ.128 நஷ்டத்திலும், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.80 நஷ்டத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த விலை ஏற்றத்தின் மூலம் இந்த நஷ்டத் தொகையை ஈடு செய்ய முடியும்' என்றார்.
இலங்கையின் ரூபாய் மதிப்பு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வருவதால் இறக்குமதி பொருள்களுக்கு தேவையான தொகையை செலுத்த முடியவில்லை. இதனால் அத்தியாவசிய பொருள்களான பெட்ரோல், டீசல் காலியாகும் நிலை ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
December 21, 2024, 10:09 pm
இலங்கையில் கோர பஸ் விபத்து: மூவர் பலி, 27 பேர் படுகாயம்
December 21, 2024, 6:10 pm
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஏமன்
December 21, 2024, 11:52 am
அமெரிக்க அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது
December 20, 2024, 10:50 pm
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 93.1 மீட்டர் கிறிஸ்துமஸ் ரொட்டி
December 20, 2024, 7:33 pm
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்களுடன் கரை ஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு
December 20, 2024, 1:04 pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்திக்கத் தயார் : விளாடிமர் புதின்
December 19, 2024, 5:46 pm
பறவைக் காய்ச்சலிலிருந்து பிரான்ஸ் விடுபட்டது
December 19, 2024, 9:55 am