நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

பவுன் பவுனுதான் - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் 

‘பவுன் பவுனுதான்’ என்பது தமிழ் வழக்கச் சொல். ‘ஸ்டெர்லிங் பவுன் (Sterling Pound) என்று பிரிட்டிஷ் நாணயத்தைக் குறிக்கும் சொல்லிலிருந்து மருவிய இச்சொல் தங்கம், சொக்கத் தங்கம், சொர்ணம் என்ற சொற்களுக்கு ஈடான வார்த்தையாக இன்றும் புழக்கத்தில் உள்ளது.

இப்போது வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை உயர்நத்துவிட்டது. காலப் போக்கில் ஏற்ற இறக்கம் இயல்பானது என்றாலும் விகிதாச்சார கணக்குப்படி தங்கத்தின் விலை  போகப்போக உயர்ந்தே நிற்கிறது. எனவே, தங்கம் ஒரு நல்ல சேமிப்பு என்பதும் தூர நோக்கில் அதன் மதிப்பு உயர்ந்து வரும் என்பதை பெண்களும் அதிகம் உணர்ந்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு தங்கத்தின் விலை மிகுந்த ஏற்றத்தை இப்போது கண்டுள்ளது. இது தங்கம் என்ற உலோகப் பொருளுக்குத் தரப்படும் மதிப்பு மட்டுமல்ல; உலகப் பொருளாதார நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஒரு பயன்பொருள் அது என்று உணர வேண்டும். அதனால், தங்கத்திற்கு என்றுமே மதிப்புதான். இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார  மற்றும் போர் இறுக்கத்தில் அதன் உபயோகம் கூடி மதிப்பும் உயர்ந்து வருகின்றது. அதனால் சாதாரணமானவர் எப்படி அதனை அணுக முடியும் என்பதை பார்ப்போம்.

ஒன்று   :   வீட்டு சேமிப்பை தங்கமாக வீட்டிலேயே வைத்துக் கொள்வதும், வங்கிப் பெட்டகங்களில் (லாக்கர்களில்) பாதுகாப்பாக வைத்துக் கொள்வதும் ஒரு வகைப்படும். இது காலங்காலமாக நடந்து வரும் ஒன்று.

இரண்டு  :  வங்கியில் வைப்பு பணமாக வைத்திருக்காமல், தங்கத்தை வைப்பு பொருளாக வைத்து ரசீது பெற்றுக்  கொள்வது இன்னொரு வகை. இது திருட்டுப் போவதைத் தவிர்க்கும்.

மூன்று   :  பவுன் முகராக்கள் ஒரு காலத்தில் சேமிப்பாக இருந்தது போல் இப்போது தீனார் (Dinar) முகராக்கள் வழக்கத்தில் வந்துள்ளன. மற்ற நாடுகளில் பல வகையான தங்க நாணயங்கள் உலா வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

நான்கு  : அமெரிக்கா டாலர் பச்சையைத் தவிர மற்ற நாட்டு நாணயங்களின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக மலேசியா ரிங்கிட்டின் மதிப்பும் குறைந்துள்ளது. தங்கம் கைவசம் இருப்பாக இருத்தல், நாணய மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வியூகமாகும்.

ஐந்து  : சொக்கத் தங்கம் கட்டிகளை இப்போது வங்கிகளே விற்பனை செய்து வருகின்றன. நகைகளாக அல்லாமல், அவை சேமிப்பாகவும் வலம் வருகின்றன.

எனவே, தங்கத்தின் மௌசு கூடி வருகிறது என்பது இப்போதைய உலகப் பொருளாதாரத்தின் ஒரு பெரும் தாக்கம். தங்கத்தை விற்காதீர்கள்! மாறாக சேமிப்பு பணத்தைக்கூட தங்கமாக மாற்றும் தருணம் இதுதான். என்றும் பவுன் பவுனுதான்!

தொடர்புடைய செய்திகள்

+ - reset