நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

இந்தியா - சீனா மேல் சர்வதேச விண்வெளி மையம் விழ வாய்ப்பு: ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ:

ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடையின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) இருந்து ரஷியாவை விலக்கி விட்டால், இந்தியா மீதோ சீனா மீதோ விழ வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை ரஷியா எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. ரஷிய வங்கிகளுக்குத் தடை, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சொத்துகள் முடக்கம்,

ஏற்றுமதியில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

Russia Warns US Against Sanctions On Space Cooperation; 'Option Of ISS  Dropping On India'

ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்கோஸ்மாஸ் இயக்குநர் டிமிட்ரி ரோகோஸின் டிவிட்டரில், அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், ரஷியாவின் விண்வெளித் துறையையும் அத்துறை சார்ந்த திட்டங்களையும் பாதிக்கும்.

சர்வதேச விண்வெளி மையத்தின் சுற்றுவட்டப்பாதை, அதன் இடம் ஆகியவற்றை ரஷிய என்ஜின்களே கட்டுப்படுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில் ரஷியாவுடன் ஒத்துழைத்து பணியாற்ற அமெரிக்கா மறுத்தால், ஐஎஸ்எஸ் கட்டுப்பாட்டை இழந்து அமெரிக்கா மீதோ ஐரோப்பிய நாடுகள் மீதோ விழுவதை யாரால் தடுக்க முடியும்?

500 டன் எடை கொண்ட ஐஎஸ்எஸ், இந்தியா, சீனா மீது விழுவதற்கும் வாய்ப்புள்ளது. ஐஎஸ்எஸ் ரஷியா மீது சுற்றிவரவில்லை. எனவே, அனைத்து அச்சுறுத்தல்களும் மற்ற நாடுகளுக்கே உள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset