நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

ஒன்றாக இருந்தவர்கள் ஏன் வீழ்கின்றனர்? - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் 

ஒன்றாக இருந்தவர்கள், ஓட்டிப் பிறந்தவர்கள் பிரிந்த பின்னர் ஏன் வெவ்வேறாகத் திகழ்கின்றனர்? ஒருவர் உயர்ந்தும், இன்னொருவர் தாழ்ந்தும் ஏன் போகின்றனர்? உதாரணத்திற்கு இரண்டு நிறுவனங்களைக் கூறலாம். 

இந்தியாவில் அம்பானி நிறுவனம் முதல் தலைமுறையில் கொடிகட்டிப் பறந்தது. தகப்பனார் திருபாய் மறைவிற்குப் பிறகு பிள்ளைகள் அம்பானி வர்த்தக சாம்ராஜ்ஜியத்தைப் பிரித்துக் கொண்டனர். 

மூத்தவர் முகேஷ், இளையவர் அனில்  இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வர்த்தகத்தை வழிநடத்தினார்கள் .     

இன்று இளையவர் நொடித்துவிட்டார். அவர் திவாலாகும் நிலையில் இருந்து மூத்தவரால் காப்பாற்றப்படுகிறார். 

அதேபோல் மலேசியா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (MSA) என்ற நிறுவனம் மலேசியா - சிங்கப்பூர் பிரிவினைக்குப் பின்னர் இரண்டாகப் பிரிந்தது. 

மலேசியாவில் (MAS) என்றும் சிங்கப்பூரில் சியா (SIA) என்றும் தனித்தனி நிறுவனங்களாக இயங்குகின்றன. 

இன்று சிங்கப்பூரின் சியா நிறுவனம் உலகின் முன்னோடி விமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மலேசியாவின் மாஸ் நிறுவனம் பலநூறு கோடிகளை விழுங்கி கொண்டு தள்ளாடும் நிலையில் இருக்கின்றது. 

இது ஏன் என்ற கேள்வி நியாயமானதே! 

ஒன்று   :   வர்த்தகத்தில் முதல் குறிக்கோள் சேவை. அதனை செவ்வனே செய்தால், பொருள் ஈட்ட முடியும். மற்ற வழிகளைத் தேடுவது தொழில் மரபு இல்லை. 

இரண்டு  : பெருமைக்கு மாரடிப்பது என்ற ஈடுபாடு வியாபாரத்தில் இருக்கவே கூடாது. அனில் அம்பானி விஷயத்தில் தொலைத் தொடர்பு வியாபாரத்திற்குத் தாவி அதனால் ஏற்பட்ட குளறுபடி பெரிய இழப்பைச்  சந்தித்தது. மாஸ் விமான நிறுவனத்திற்கு தேவைக்கு அதிகமான தளவாட (விமானங்கள்) கொள்முதல் செய்யப்பட்டு முதலை முடக்கிவிட்டது; கட்டி வராத உபகரணங்கள் செலவினத்தை அதிகரித்துவிட்டது.

மூன்று  : பிரிவினையுடன் அகம்பாவமும் உடன் வந்தால் வேறு வினையே வேண்டாம். அகம்பாவத்தை, ஆணவத்தை முற்றாக  முடக்கிப்போட வேண்டும். "நான் பெரியவன்!" "அவனை வீழ்த்திவிட வேண்டும்!"  "அந்த நிறுவனத்தை ஒரு கை பார்த்துவிடுகிறேன்!" என்ற பிதற்றல்களுக்கு தொழிலில் இடமில்லை.

வியாபாரம் தொடர இலக்கும், அதனை இயக்கும் நிர்வாகத் திறமையுமே   கண்ணாக,  கருத்தாக இருக்க வேண்டும். அதனை மறந்தால், 'குருட்டாம்போக்கு'  நிர்வாகம்தான். அது மூடுவிழாவிற்குத்தான் வியாபாரத்தை இட்டுச் செல்லும்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset