நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

நேர்மை, வாய்மை, முழுமை இவை மூன்றும் தலைமைத்துவத்தின் சிறப்பு - டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் 

'தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை!' - இந்த முதுமொழி இயற்கையின் அதாவது புவியியல் இயல்பைக் கூறுகிறது. மரபணுவின் தொடர் பிரயோகத்தின் யதார்த்த நிதர்சனத்தை இது சுட்டுகிறது

ஒரு நிறுவனத்தின் தலைவர், தலைமை அதிகாரி, எப்படி நிர்வாகத்தை நடத்திச் செல்கிறார், இலக்கை அடைகிறார் என்பதற்கு இந்த முதுமொழி சான்று பகர்கிறது . 

'தலையைப் போன்றே சேவகர்கள் இருப்பார்கள்!' என்ற கூற்றின்படி நிர்வாகத்தைக் கட்டி ஆள்பவரின் ஆளுமை மற்றும் குணாதிசயங்களைக் கொண்டே சிப்பந்திகளின் வேலைத் திறமையும் பொறுப்புணர்வும் அமையும். மீன் அழுகுவது தலையிலிருந்துதான் என்பது போல, ஒரு நிறுவனத்தின் அழகிற்கும் அழுக்கிற்கும் அவரே உடையதாரி. எனவே, அத்தகையவரின் பண்பு மூன்று கூறுகளில் பிரதிபலிக்க வேண்டும். 

ஒன்று  :   
நேர்மை  :  நியாய வரம்புகளுக்கு உட்பட்டு நேர்மையை அனைத்து நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சுயவிருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நேர்மையை முன்னிறுத்தி செயல்முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது. 

இரண்டு  :
வாய்மை : நிர்வாகத்தில் ஒரு பேச்சிற்கு இரண்டு அர்த்தங்கள் இல்லையென்பது வெளிப்படைக் கூற்றாக இருக்க வேண்டும். உண்மைக்கு புறம்பானதாக இட்டுக்  கட்டிப் பேசும் வார்த்தைகளுக்கு இடம் தராமல், அதே சமயத்தில் கண்டிப்புடன் எடுக்கும் முடிவுகள் மதிக்கப்படும்; போற்றப்படும்.

மூன்று   :  
முழுமை  :  நிர்வாகத்தில் ஒரு பிரச்சினை என்றால், அது ஒரு சார்புடைய விஷயம் என்று கருதாமல், ஒட்டுமொத்த பணியாளர்களின் சேமலாபத்தை எவ்வாறு பாதிக்கும் என்ற பொது அலசல் மனப்பான்மையுடன் பிரச்னையை அணுக வேண்டும்.

நேர்மையும், வாய்மையும் என்றும் வெல்லும் என்பதுடன் தலைமைத்துவம் நீடிக்க முழுமையும் சேர்ந்தே இயங்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset