நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

வியாபாரத்தில் சகலகலா வல்லவனாகத் திகழ்வது ஆபத்து - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்

கப்பலுக்கு நங்கூரம் எவ்வளவு முக்கியமோ, வியாபாரத்திற்கு அவ்வளவு முக்கியம் நிறுவனர் எனலாம். எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு காரியமே இலக்கு என்று மூச்சுமுட்ட வேலை பார்ப்பதில் அவருக்கு நிகர் அவரே!

இந்தப் பண்பும் பழக்கமும் ஊறிப்போன ஒன்று என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும், தோற்றுநருக்குப் பின்னர் யார் என்ற கேள்வியை இப்போதே  கேட்பது நல்லது. அதுமட்டுமல்ல! அதற்குத்தக்க ஏற்பாடுகளை தள்ளிப்போடாமல் இப்போதே  அமைத்துக் கொள்வது வருங்கால சங்கடத்தை அகற்றும் வழியாகும்.

ஒன்று  :  ஒரு காலத்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததைப்  பெருமையடிக்காமல், இப்போதே மற்றவர்களுக்கு ஒரு சில வேலைகளை பகிர்ந்து அளித்து அதனை செவ்வனே செய்யும் வழிகளையும் அமைத்து மேலாண்மை செய்வது அவசியம்.

இரண்டு  :  ஒருவரின் சாதுரியத்தில் இயங்கும் நிறுவனம், அவர் இல்லாவிட்டால் ஆட்டங்காணும் என்பதை வங்கிகளும், முதலீட்டாளர்களும் துல்லியமாக கணிக்கின்றனர். ஒருவரின் திறமையை கூடுதல் மதிப்பீடு போடும் அவர்கள், அடுத்த நிலை அதிகாரி பொறுப்பாளர் இல்லையென்றால், மிகக் குறைவான மதிப்பீட்டையே தருவார்கள்.

மூன்று  :  'என்னைப் போல் நீ இயங்க முடியாது என்ற தற்பெருமை எண்ணத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, ' என்னைப் போல் நீ வர  வேண்டும்!' என்பதற்கு ஆக்க வேலைகளைப் படிப்படியாக செய்வது நலம்.

கப்பல் ஓரிடத்தில் நிற்பதற்குத்தான் நங்கூரம் உதவும். பயணத்தில் இருக்கும் கப்பலில் நங்கூரம் தூக்கப்பட்டு தொங்கும் - தூங்கும் நிலையில் இருக்கும். அதேபோன்று வியாபாரத்தில் நிறுவனர், தோற்றுனர், முதலாளி தன்  கடமைகளைச்  செய்வது ஒரு காலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டாலும், நிகழ்காலத்தில் அந்தப்  பொறுப்புகள்  பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்குரிய பயிற்சிகள் ஆரம்பக்கட்டத்திலேயே தரப்பட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset