செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியின் ஹாட்ரிக் வெற்றி: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி பெருமிதம்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணி இவ்வாண்டு நடந்த மூன்று மாநில தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி மிகுந்த பெருமிதத்துடன் கூறினார்.
தேசிய முன்னணி மலாக்கா மாநிலத்தில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. 28 சட்டமன்ற இடங்களில் 21 இடங்களில் வெற்றிக்கொண்டு பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து மாநில அரசாங்கத்தை அமைக்கிறது என்று ஸாஹித் ஹமிடி பி.பி.பி கட்சியின் தீபாவளி கொண்டாட்டத்தின் சிறப்புரையில் குறிப்பிட்டார்
இதனால் எதிர்வரும் தேர்தல்களில் தேசிய முன்னணி மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
மேலும், பிபிபி கட்சிக்கு தேசிய முன்னணி சார்பில் ஓர் இடம் பொதுத்தேர்தலில் போட்டியிட கொடுக்கப்படும் என்ற தகவலையும் அஹ்மத் ஸாஹித் ஹமிடி பலத்த கரவொலிக்கு மத்தியில் பேசினார்
முன்னதாக, பிபிபி கட்சியின் தீபாவளி கொண்டாட்டம் 2026 கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ஸ் கந்தையா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகபாலா, ம.இகா தேசிய துணைத்தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், ம.சீச பிரமுகர்கள், பிபிபி கட்சியின் மகளிர், இளைஞர் பிரிவு தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் சிறப்பாக இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2026, 3:42 pm
திலி அனைத்துலக வர்த்தக மாநாடு 2026-ஐ முன்னின்று MYTF Events நடத்துகிறது: புதிய மைல்கல் சாதனை
November 15, 2026, 3:39 pm
நான் அனைத்து மலாக்கா மக்களுக்கான முதலமைச்சர்: அப்துல் ரவுஃப்
November 15, 2026, 3:38 pm
தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி வெற்றியையொட்டி நாளை சிறப்பு விடுமுறை: மலாக்கா அரசு அறிவிப்பு
November 15, 2026, 3:37 pm
வணிகங்கள் வளர்வதற்கு இடமளிக்க ஓபிஆர் பராமரிக்கப்படுகிறது: டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா
November 15, 2026, 9:29 am
34 வயதில் கெர்க் மலாக்காவின் இளம் வெற்றியாளர் - 65 வயது அப்துர் ரவூஃப் மீண்டும் முதலமைச்சர்
November 15, 2026, 8:25 am
