செய்திகள் மலேசியா
திலி அனைத்துலக வர்த்தக மாநாடு 2026-ஐ முன்னின்று MYTF Events நடத்துகிறது: புதிய மைல்கல் சாதனை
திலி:
மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு அனைத்துலக அளவில் நிகழ்ச்சி மேலாண்மை, வர்த்தக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் My Events International நிறுவனம், திமோர்-லெஸ்டேயில் MYTF Events என்ற பெயரில் உள்ளூரில் பதிவு செய்யப்பட்ட கூட்டு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக நிறுவியுள்ளது.
இதன் முக்கிய மைல்கல்லாக, திமோர்-லெஸ்டே வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள திலி சர்வதேச வர்த்தக மாநாடு 2026 நிகழ்வின் மேலாண்மைப் பொறுப்பை MYTF Events ஏற்றுள்ளது.
இந்நிகழ்வு வரும் நவம்பர் 17ஆம் தேதி திலியில் உள்ள GMN பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் Dili International Trade Expo (DITE) கண்காட்சியுடன் இணைந்து நடத்தப்படும் இந்நிகழ்வில், 150 சர்வதேசப் பிரதிநிதிகள், 200 உள்ளூர் பிரதிநிதிகள் என மொத்தம் 350 பேர் பங்கேற்கவுள்ளனர்.
அனைத்துலக வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி சந்திப்புகளை மேம்படுத்துவதே இம்மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.
MYTF Events நிறுவனத்தின் இயக்குநர்களான டத்தின் வீரா சப்ரினா, ஒலிவியோ ஆகியோரின் தலைமையில், பொது மேலாளர் டெய்லான் முஹம்மது இந்த முன்னெடுப்பை வழிநடத்தி வருகிறார்.
திமோர்-லெஸ்டேயில் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த டெய்லான் முஹம்மது ரவி, மலேசியாவின் முன்னாள் தூதர் டத்தோ அமர்ஜித் சிங் சர்ஜித் சிங்கிற்கு நன்றி தெரிவித்தார்.
அவரது அழைப்பும் ஆதரவும் ஆரம்பகட்ட MyExpo Dili வர்த்தகக் கண்காட்சி உருவாக முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்நிகழ்வை நடத்த MYTF Events நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த திமோர்-லெஸ்டே வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பிலிபஸ் நினோ பெரேராவுக்கும் நிறுவன நிர்வாகம் நன்றியைத் தெரிவித்துள்ளது.
திமோர்-லெஸ்டே நாட்டின் பொருளாதாரத்தை பெட்ரோலியத் துறையை மட்டுமே சார்ந்திருக்காமல், வர்த்தகம், முதலீடு மற்றும் இதர தொழில்துறைகள் வாயிலாகப் பல்வகைப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இந்த வர்த்தக மன்றம் முக்கிய ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளுடன் உள்ளூர் தொழில்முனைவோர், கொள்கை வகுப்பாளர்கள் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இம்மன்றம் வழிவகுக்கும்.
மலேசியா, ஆசியான் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வரும் My Events International நிறுவனம், திமோர்-லெஸ்டேயின் தலைநகரான திலியை சர்வதேச மாநாடுகள், வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் முதலீட்டு மன்றங்களுக்கான முக்கிய மையமாக உருவாக்கும் நோக்கத்துடன் MYTF Events நிறுவனத்தின் மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 1:09 am
தேசிய முன்னணியின் ஹாட்ரிக் வெற்றி: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி பெருமிதம்
November 15, 2026, 3:39 pm
நான் அனைத்து மலாக்கா மக்களுக்கான முதலமைச்சர்: அப்துல் ரவுஃப்
November 15, 2026, 3:38 pm
தேசிய முன்னணி - தேசியக் கூட்டணி வெற்றியையொட்டி நாளை சிறப்பு விடுமுறை: மலாக்கா அரசு அறிவிப்பு
November 15, 2026, 3:37 pm
வணிகங்கள் வளர்வதற்கு இடமளிக்க ஓபிஆர் பராமரிக்கப்படுகிறது: டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா
November 15, 2026, 9:29 am
34 வயதில் கெர்க் மலாக்காவின் இளம் வெற்றியாளர் - 65 வயது அப்துர் ரவூஃப் மீண்டும் முதலமைச்சர்
November 15, 2026, 8:25 am
