செய்திகள் விளையாட்டு
மேஜர் லீக் வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனை: தொடர்ந்து 2ஆவது ஆண்டாக தங்க காலணி வென்ற மெஸ்ஸி
மியாமி,
அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மேஜர் லீக் தொடரில் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக தங்க காலணி விருதை வென்று வரலாறு படைத்துள்ளார்.
2026-ம் ஆண்டுக்கான மேஜர் லீக் சீசனில் இந்தர்மியாமி அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, மொத்தம் 26 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இதன் மூலம் இந்த விருதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு சீசனில் 29 கோல்கள் அடித்து தங்க காலணி விருதை வென்ற மெஸ்ஸி, இந்த ஆண்டும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து 26 கோல்களுடன் விருதைத் தக்கவைத்துக் கொண்டார்.
இந்த ஆண்டுக்கான கோல் பட்டியலில் டல்லாஸ் அணியின் பெட்டார் மூசா 22 கோல்களுடன் 2ஆவது இடத்தையும், நாஷ்வில் அணியின் சாம் சரிட்ஜ் 21 கோல்களுடன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.
இதன் மூலம் மேஜர் லீக் வரலாற்றில் இரண்டு முறை கோல்டன் பூட் விருதை வென்ற 6ஆவது வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த விருதை அடுத்தடுத்த ஆண்டுகளில் வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2026, 9:49 am
பிரான்ஸ் அணிக்கு எம்பாப்பே புதிய உற்சாகத்துடன் திரும்புகிறார்: கோனதே
November 9, 2026, 12:31 pm
ஷோயப் அக்தரின் வேகப்பந்து வீச்சு சாதனையை இனி எந்த மனிதராலும் முறியடிக்க முடியாது: கங்குலி
November 9, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 9, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
November 6, 2026, 10:04 am
ரொனால்டோவுக்கு பிரியாவிடை விழா நடத்த போர்த்துகல் திட்டமிட்டுள்ளது
November 6, 2026, 10:00 am
டேவிட் பெக்கம் மென்செஸ்டர் யுனைடெட்டின் புதிய உரிமையாளரா?
November 5, 2026, 3:33 pm
ஒரே ஆட்டத்தில் 53 பேருக்கு சிவப்பு அட்டை: காற்பந்து ஆட்டத்தில் கைகலப்பு
November 5, 2026, 8:33 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
November 4, 2026, 8:28 am
