செய்திகள் சிந்தனைகள்
மந்தை மனோபாவம் - வெள்ளிச் சிந்தனை
பெரும்பான்மை மக்கள் தாங்கள் சுதந்திரமானவர்கள் என்றே நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் மந்தை மனோபாவத்துடன்தான் நடக்கிறார்கள்.
மந்தை மனோபாவம் என்றால்..?
ஒரே மாதிரியான எண்ணங்கள். ஒரே மாதிரியான ரசனைகள். ஒரே மாதிரியான உடைகள். ஒரே மாதிரியான தோற்றம். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கை.
உளவியலாளர் குஸ்டாவ் லெபான் (Gustave Le Bon) கூறுகிறார்: "ஒரு தனிநபர் கூட்டத்தோடு கலக்கும்போது, தன் சொந்த புத்தியைக் கைவிட்டு, கூட்டத்தின் புத்தியைத் தத்து எடுக்கிறான்."
இதனால்தான் இன்றைய மனிதர்கள் பல விஷயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்தவர்களாக இருக்கிறார்கள்.
குறிப்பாக.. மனிதனைத் தான் நம்பாத ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும், தனக்குப் பொருத்தமில்லாத உடையை உடுத்தச் செய்யும், ஒழுக்கக் கேடான உறவை ஏற்க வைக்கவும் "டிரெண்ட்" (Trend) கலாச்சாரம் தோன்றியதிலிருந்து இது இன்னும் அதிகமாகிவிட்டது.
மற்றவர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்பதற்காக மட்டுமே நாமும் அப்படிச் செய்வது படுமோசம்! மற்றவர்கள் அப்படி சிந்திக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே நாமும் அப்படி சிந்திப்பது படுகேவலம்!!
இன்றைய சமூகத்தின் கோட்பாடு என்ன தெரியுமா: 'நீயும் எங்களைப் போலவே இரு, அல்லது நாங்கள் உன்னை எதிர்த்துப் போராடுவோம்!’
எனவேதான் மந்தை மனப்பான்மையில் கரைந்துபோக மறுப்பவர்களை பெரும்பான்மை சமூகம் நிராகரிக்கிறது.
அவர்களின் இருப்பு தங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் என்று இவர்கள் கருதுகிறார்கள்.
லூத் (அலை) அவர்கள் காலத்தில் ஒட்டுமொத்த ஊர் மக்களும் ஒருபால் உறவில் ஈடுபட்டனர். அதை லூத் (அலை) எதிர்த்தார். அதற்காக லூத் நபியை அவ்வூர் மக்கள் எப்படி கிண்டலடித்தார்கள் என்பதை அல்குர்ஆன் அழகாகச் சொல்கிறது:
"அதற்கு அக்கூட்டத்தார் இதைத்தான் பதிலாய்க் கூறினார்கள்: “இவர்களை உங்களுடைய ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள் போல் நடக்கின்றார்கள்.” (7:82)
எல்லாரும் செல்வதுபோல் நீங்களும் செல்வதை விட, உண்மையை உணர்ந்து அதில் உங்கள் கால்தடங்களை பதிக்க முயலுங்கள். அதுவே உண்மையான சுதந்திரம்!
நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
November 6, 2026, 7:22 am
மக்காவில் மரணிப்பதுதான் நல்ல மரணமா?: வெள்ளிச் சிந்தனை
October 30, 2026, 6:54 am
தடை அதை உடை - வெள்ளிச் சிந்தனை
October 23, 2026, 6:40 am
குர்ஆன் கூறும் மரணித்தவர்களின் ஏக்கங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 16, 2026, 12:45 am
தீக்குண்டத்தார் அனைவரும் ஏன் மரணத்தை தேர்ந்தெடுத்தார்கள்? - வெள்ளிச் சிந்தனை
October 9, 2026, 6:59 am
வெளியே அணியும் காலணிகளுடன் வீட்டிற்குள் நுழைகிறீர்களா? - வெள்ளிச் சிந்தனை
October 1, 2026, 11:48 pm
சியோனிஸ்ட்டுகளின் தேர்தல் சதி நாடகம்தாம் விமானக் கத்திக் குத்து
September 25, 2026, 7:34 am
