செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயத்தின் நலனுக்கு மஇகா என்றுமே துணை நிற்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி வாழ்த்து
கோலாலம்பூர்:
தீபத்திருநாளைக் கொண்டாடும் மலேசிய வாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும்
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இந்த ஒளிவிளக்குப் பண்டிகை, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்தின் கல்வி மறுமலர்ச்சி, பொருளாதார மேம்பாடு, வளப்பமான சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு கட்டியம் கூறுவதாக அமைய வேண்டும்.
இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மஇகா என்றும் துணை நிற்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
இதற்கு முக்கிய சான்றாக இந்திய மாணவர்களின் கல்விக்கு அடித்தளம் அமைத்து வரும் மஇகாவின் எம்ஐஇடி ஏய்ம்ஸ்ட் கல்வி கழகங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
உயர்க்கல்வி ஒன்றுதான், நம் சமுதாயத்தைக் காக்கவல்ல ஒரே ஆயுதம் என்பதால்தான், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான வெள்ளியை நம் சமுதாய மாணவர்களின் நலன் கருதி எம்ஐஇடி மூலம் கல்வி உதவி நிதியாகவும் கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மஇகா தொடர்ந்து பாடுபடும் என்று தீபாவளி நன்நாளில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
அந்த வகையில் தீபாவளிப் பண்டிகையை நாம் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
நம்மிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கு இந்தத் தீபத் திருநாள் மிகமிக அவசியம்; நமது சமயம், பாரம்பரியத்தை வழிவழியாக கட்டிக்காப்பதற்கும் இத்தகைய பண்டிகைகள் துணைபுரியும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2026, 9:45 pm
புதிய நம்பிக்கையோடு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 7, 2026, 9:44 pm
தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்: டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்து
November 7, 2026, 9:43 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
November 7, 2026, 5:44 pm
நஜிப்பின் விடுதலை; பிரச்சினைகளை விளக்க மாமன்னர் முன் சட்டத்துறை தலைவர் ஆஜராக வேண்டும்: பிரதமர்
November 7, 2026, 5:43 pm
நான் பிரதமராக இருந்திருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்திருப்பேன்; அமைச்சரவையை மாற்றங்கள்: மொஹைதின்
November 7, 2026, 5:41 pm
நிதியுதவிகளைத் தாண்டி, இந்தியச் சமூகத்திற்கு நிலையான பொருளாதார மாற்றம் அவசியம்: ACE வலியுறுத்தல்
November 7, 2026, 3:27 pm
நெகிரி செம்பிலான் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; 7,000 பேர் கலந்து கொள்வார்கள்: இஸ்மாயில் லசிம்
November 7, 2026, 3:17 pm
