செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; 7,000 பேர் கலந்து கொள்வார்கள்: இஸ்மாயில் லசிம்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு கிட்டத்தட்ட 7,000 பேர் கலந்து கொள்வார் என இலக்கிடப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம் இதனை தெரிவித்தார்
வரும் நவம்பர் 14ஆம் தேயி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சிரம்பான் மாநகர் மன்ற மண்டபத்தில் இந்த திறந்த இல்ல உச்சரிப்பு நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் சுமார் 7,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 30,000 ரிங்கிட்டாக இருந்த தீபாவளி திருவிழாவை ஏற்பாடு செய்வதற்கான மாநில அரசின் ஒதுக்கீடு, இந்த ஆண்டு 70,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இனங்கள், கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலவிதமான உணவுகள், குறிப்பாக பாரம்பரிய இந்திய உணவுகள், இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இதன் மூலம் பார்வையாளர்கள் நல்லெண்ணம் நிறைந்த சூழலில் பல்வேறு உணவுகளை உண்டு மகிழ முடியும் என்றும் அவர் கூறினார்.
சமூகத்தில் நல்லெண்ண உணர்வை வளர்ப்பதற்காக, தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நெகிரி செம்பிலான் மக்கள் அனைவரும் ஒன்றிணையுமாறு மாநில அரசு அழைக்கிறது.
சமூகங்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், ஏற்கனவே நிலவி வரும் ஒற்றுமையை மேலும் உறுதிப்படுத்தவும், ஒவ்வொரு பண்டிகையும் உற்சாகமான, இணக்கமான, மகிழ்ச்சியான சூழலில் கொண்டாடப்படுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2026, 9:46 pm
இந்திய சமுதாயத்தின் நலனுக்கு மஇகா என்றுமே துணை நிற்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி வாழ்த்து
November 7, 2026, 9:45 pm
புதிய நம்பிக்கையோடு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 7, 2026, 9:44 pm
தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்: டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்து
November 7, 2026, 9:43 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
November 7, 2026, 5:44 pm
நஜிப்பின் விடுதலை; பிரச்சினைகளை விளக்க மாமன்னர் முன் சட்டத்துறை தலைவர் ஆஜராக வேண்டும்: பிரதமர்
November 7, 2026, 5:43 pm
நான் பிரதமராக இருந்திருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்திருப்பேன்; அமைச்சரவையை மாற்றங்கள்: மொஹைதின்
November 7, 2026, 5:41 pm
நிதியுதவிகளைத் தாண்டி, இந்தியச் சமூகத்திற்கு நிலையான பொருளாதார மாற்றம் அவசியம்: ACE வலியுறுத்தல்
November 7, 2026, 3:17 pm
