செய்திகள் மலேசியா
நஜிப்பின் விடுதலை; பிரச்சினைகளை விளக்க மாமன்னர் முன் சட்டத்துறை தலைவர் ஆஜராக வேண்டும்: பிரதமர்
ஷாஆலம்:
நஜிப் ரசாக்கிற்கு எதிரான வீட்டுக் காவல் உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகளை விளக்குவதற்கும், மன்னிப்புக் கோருவதற்கும் சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் உடனடியாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முன் ஆஜராக வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
மாமன்னரி உத்தரவையும் அதிகார வரம்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.
அந்த முடிவை நிறைவேற்றுவதற்கும் அதைச் செயல்படுத்தும் பொறுப்பிற்கும் தயாராகி வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
மாமன்னரின் அதிகாரத்தில் எந்த சர்ச்சையும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மேலும் மன்னிப்புக் கோருவதற்கும், பின்னர் தற்போதைய பிரச்சினைகள் என்ன என்பதை விளக்குவதற்கும் மாமன்னர் முன் ஆஜராக தலைமை வழக்கறிஞர் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2026, 9:46 pm
இந்திய சமுதாயத்தின் நலனுக்கு மஇகா என்றுமே துணை நிற்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி வாழ்த்து
November 7, 2026, 9:45 pm
புதிய நம்பிக்கையோடு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 7, 2026, 9:44 pm
தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்: டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்து
November 7, 2026, 9:43 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
November 7, 2026, 5:43 pm
நான் பிரதமராக இருந்திருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்திருப்பேன்; அமைச்சரவையை மாற்றங்கள்: மொஹைதின்
November 7, 2026, 5:41 pm
நிதியுதவிகளைத் தாண்டி, இந்தியச் சமூகத்திற்கு நிலையான பொருளாதார மாற்றம் அவசியம்: ACE வலியுறுத்தல்
November 7, 2026, 3:27 pm
நெகிரி செம்பிலான் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; 7,000 பேர் கலந்து கொள்வார்கள்: இஸ்மாயில் லசிம்
November 7, 2026, 3:17 pm
