செய்திகள் மலேசியா
நிதியுதவிகளைத் தாண்டி, இந்தியச் சமூகத்திற்கு நிலையான பொருளாதார மாற்றம் அவசியம்: ACE வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
மலேசிய இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் நிதியுதவிகள் மட்டுமே போதுமானதாக இருக்காது.
மாறாக, நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்தும் திட்டங்களும் கட்டமைப்பு மாற்றங்களும் அவசியம் என இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு (ACE) வலியுறுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு அரசாங்கம் வழங்கிய ரஹ்மா பண உதவி, மித்ராவுக்கான நிதி ஒதுக்கீட்டை 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியது.
தொழில்முனைவோருக்கு கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கியது மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியது போன்ற நடவடிக்கைகளை ACE வரவேற்றுள்ளது.
இருப்பினும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களை எதிர்கொள்ளும் பி40 இந்தியக் குடும்பங்களுக்கு தற்காலிக நிதியுதவிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையாது என்று அதன் தலைவர் பசுபதி கூறினார்.
இந்திய இளைஞர்களுக்குத் தரமான வேலை வாய்ப்புகள், சிறந்த கல்வி வாய்ப்புகள், தொழில்முனைவோர் மேம்பாடு, குடும்ப வருமான உயர்வு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இதற்காகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இந்தியச் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான அமைச்சரவைக் குழுவை மீண்டும் அமைக்க வேண்டும்.
நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் சுதந்திரமாகச் செயல்படும் தனி நிறுவனத்தை உருவாக்க வேண்டும்.
மேலும், மித்ராவின் செயல்பாடுகளையும் மறுஆய்வு செய்து, நிதி உதவிகளை வழங்குவதுடன் மட்டுமல்லாமல், இந்தியச் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் உண்மையான முன்னேற்றங்களைக் கண்காணிக்க வேண்டும்.
பி40 குடும்பங்கள் உயர்வருமானப் பிரிவுக்கு முன்னேறுவது, மாணவர்கள் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வது, இளைஞர்கள் நிலையான வேலை வாய்ப்புகளைப் பெறுவது மற்றும் சிறு தொழில்கள் வளர்ச்சியடைவது ஆகியவையே அரசாங்கத்தின் வெற்றியை அளவிடும் முக்கியக் குறியீடுகளாக இருக்க வேண்டும்.
இந்தியச் சமூகம் தொடர்ந்து அரசாங்க உதவிகளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, வறுமையிலிருந்து நிரந்தரமாக மீண்டு, நாட்டின் வளர்ச்சியில் சமமான பங்களிப்பை வழங்கக்கூடிய நிலையை உருவாக்குவதே அரசாங்கத்தின் உண்மையான சாதனையாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2026, 9:46 pm
இந்திய சமுதாயத்தின் நலனுக்கு மஇகா என்றுமே துணை நிற்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி வாழ்த்து
November 7, 2026, 9:45 pm
புதிய நம்பிக்கையோடு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 7, 2026, 9:44 pm
தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்: டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்து
November 7, 2026, 9:43 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
November 7, 2026, 5:44 pm
நஜிப்பின் விடுதலை; பிரச்சினைகளை விளக்க மாமன்னர் முன் சட்டத்துறை தலைவர் ஆஜராக வேண்டும்: பிரதமர்
November 7, 2026, 5:43 pm
நான் பிரதமராக இருந்திருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்திருப்பேன்; அமைச்சரவையை மாற்றங்கள்: மொஹைதின்
November 7, 2026, 3:27 pm
நெகிரி செம்பிலான் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; 7,000 பேர் கலந்து கொள்வார்கள்: இஸ்மாயில் லசிம்
November 7, 2026, 3:17 pm
