செய்திகள் மலேசியா
சிரம்பான் லிட்டில் இந்தியா என அதிகாரப்பூர்வமாக அரசிதழில் பதிவு செய்யப்பட வேண்டும்: டத்தோ அசோஜன்
சிரம்பான்:
சிரம்பான் லிட்டில் இந்தியா என அதிகாரப்பூர்வமாக அரசிதழில் (கெஷட்) பதிவு செய்யப்பட வேண்டும்.
மஇகா உதவித் தலைவர் டத்தோ எம். அசோஜன் இதனை வலியுறுத்தினார்.
மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சார்பாக, நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ ஹாஜி இஸ்மாயில் லசிமுடன் சிரம்பான் தீபாவளி சந்தையில் கலந்து கொண்டேன்.
இத்தகைய ஒரு உயிரோட்டமான திருவிழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து, ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து ஒரு அசாதாரணமான வரவேற்பைப் பெற்ற கே. முரளி தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவிற்கும், நெகிரி செம்பிலான் மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியான டத்தோ வி.எஸ். மோகனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இந்நிகழ்வில் மஇகாவின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சார்பாக, சிரம்பான் லிட்டில் இந்தியா என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதுடன் கெஷட் செய்யும் முன்மொழிவு மந்திரி புசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மந்திரி புசார் இதற்குச் சாதகமான பதிலளித்ததோடு, இவ்விஷயம் மேலதிக பரிசீலனை, நடவடிக்கைக்காக மாநில அரசின், குறிப்பாக சிரம்பான் மேயரின் கவனத்திற்குக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சமூகத்தின், குறிப்பாக சிரம்பானில் உள்ள இந்திய வர்த்தகர்களின் அடையாளம், பாரம்பரியம், கலாச்சாரம், பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் பொருட்டு, இந்த முயற்சி நனவாகும் என நம்புகிறோம் என்று டத்தோ அசோஜன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2026, 9:46 pm
இந்திய சமுதாயத்தின் நலனுக்கு மஇகா என்றுமே துணை நிற்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தீபாவளி வாழ்த்து
November 7, 2026, 9:45 pm
புதிய நம்பிக்கையோடு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 7, 2026, 9:44 pm
தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்: டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்து
November 7, 2026, 9:43 pm
தீப ஒளி பெண் தொழில் முனைவோருக்கு முன்னேற்றத்தை கொண்டு வரட்டும்: ஹேமலா
November 7, 2026, 5:44 pm
நஜிப்பின் விடுதலை; பிரச்சினைகளை விளக்க மாமன்னர் முன் சட்டத்துறை தலைவர் ஆஜராக வேண்டும்: பிரதமர்
November 7, 2026, 5:43 pm
நான் பிரதமராக இருந்திருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்திருப்பேன்; அமைச்சரவையை மாற்றங்கள்: மொஹைதின்
November 7, 2026, 5:41 pm
நிதியுதவிகளைத் தாண்டி, இந்தியச் சமூகத்திற்கு நிலையான பொருளாதார மாற்றம் அவசியம்: ACE வலியுறுத்தல்
November 7, 2026, 3:27 pm
