நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய நம்பிக்கையோடு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

புதிய நம்பிக்கையோடு நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்போம் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

தீபத்திருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

​தீபாவளியன்று நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, இறைவனை வணங்கி, இல்லங்களில் வரிசையாக விளக்கேற்றித் தீப ஒளியை ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தத் தீப ஒளி நமது இல்லங்களில் உள்ள இருளையும், நமது உள்ளங்களில் உள்ள அறியாமை இருளையும் அகற்றி, ஞான ஒளியைப் பரப்பட்டும்.

தீபாவளித் திருநாள் வெறும் கொண்டாட்டத்தோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தை நோக்கி நம்மை ஆக்கப்பூர்வமாக நகர்த்துவதாக அமைய வேண்டும்.

புதிய எதிர்பார்ப்புகளோடும் புதிய நம்பிக்கைகளோடும் ஒரு நல்ல விடியலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அதேவேளை, அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இந்த நவீன உலகத்தில், நம் பாரம்பரிய வேர்களைக் கட்டிக்காத்து, புதிய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனை நமது இளைய தலைமுறையினரிடம் வளர்ப்போம்.

​கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு சமுதாயமாக நாம் பரிணமித்துள்ளோம்.

அந்த வகையில் அறிவுசார் பொருளாதாரத்தை (Knowledge Economy) உருவாக்குவதிலும், உலகளாவிய சந்தையில் நம் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் புத்தாக்கத் திறனிலும் ஒவ்வொருவரும் முன்னேறி, ஒட்டுமொத்த சமூகத்தையும் உன்னத நிலைக்கு உயர்த்திட வேண்டும்.

​ஒளி வீசும் எண்ணங்களோடு விருந்தினர்களை உபசரித்து வரவேற்று, நமது மாண்பையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உலகிற்குப் பிரதிபலிக்கும் ஒரு மங்கல விழாவாக இது அமையட்டும்.
​
இந்த புதிய நம்பிக்கையோடும் புதிய உத்வேகத்தோடும், நிலையான வளர்ச்சியையும் சமூக நல்லிணக்கத்தையும் நோக்கிப் பயணிப்போம் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset