செய்திகள் மலேசியா
சிரம்பான் லிட்டில் இந்தியாவின் தீபாவளி சந்தை மிகவும் சிறப்பானது; மக்கள் இல்லையென்றால் நாம் இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்
சிரம்பான்:
மக்கள் இல்லையென்றால் நாம் இல்லை. ஆக அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
சிரம்பான் லிட்டில் இந்தியாவின் தீபாவளி சந்தை மிகவும் சிறப்பான நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளுக்கு இந்த சந்தையை நடத்துவதற்கு மக்கள் மஇகாவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவை உருவாக்கியவன் நான். அங்கு தீபாவளி சந்தையை சிறப்பான முறையில் நடத்தியுள்ளேன்.
ஆனால் இன்று பிரிக்பீல்ட்ஸை காட்டிலும் சிரம்பான் லிட்டில் இந்தியா தீபாவளி சந்தை தான் மிகவும் சிறப்பாக உள்ளது.
இவ்வேளையில் டத்தோ விஎஸ் மோகன், முரளி, பிரபா உட்பட அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மக்கள் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தந்துள்ளனர். அவர்கள் நமக்கு தான் ஆதரவாக இருந்தனர்.
ஆனால் நமது ஆணவம் தான் அவர்கள் இடையில் நம்மை புறக்கணித்தார்கள்.
அதே வேளையில் இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி மஇகா தான் என்பதையும் மக்கள் புரிந்துக் கொண்டனர்.
ஆக மக்களுக்காக போராடுவோம். குரல் கொடுப்போம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2026, 10:57 pm
அனைத்துலக கால்பந்து அரங்கிலிருந்து ரொனால்டோ ஓய்வு
November 5, 2026, 10:11 pm
அமெரிக்க செனட் சபைக்கு முதல் முஸ்லிமின் தேர்தல், இன அரசியலுக்கு எதிரான ஒரு பாடம்: பிரதமர் அன்வார்
November 5, 2026, 9:30 pm
மலாக்காவில் 21 தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா மூலம் 755,390 ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்
November 5, 2026, 7:23 pm
டத்தோஸ்ரீ சரவணன் கண்டனம்: தமிழ்மொழிப் பாட நேரத்தை கல்வியமைச்சு நிலை நிறுத்தியது
November 5, 2026, 12:31 pm
