செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ சரவணன் கண்டனம்: தமிழ்மொழிப் பாட நேரத்தை கல்வியமைச்சு நிலை நிறுத்தியது
புத்ராஜெயா:
2027ஆம் ஆண்டு புதிய பள்ளிப் பாடத்திட்டத்தின்கீழ், தமிழ்மொழி, மலாய் மொழி, சீன மொழி ஆகியவற்றுக்கான கற்பித்தல் நேரம் வாரத்திற்கு 12 பாடவேளைகளாகத் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மொழிப் பாடங்களுக்கான கற்பித்தல் நேர ஒதுக்கீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றக் கூட்டங்களை நடத்திய பின்னர் கல்வியமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, தேசியப் பள்ளிகளில் மலாய் மொழிக்கும், சீனத் தேசிய வகைப் பள்ளிகளில் சீன மொழிக்கும், தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்மொழிக்கும் வாரத்திற்கு 12 பாடவேளைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
ஆய்வு முடிவுகள், கலந்துரையாடல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சு, சம்பந்தப்பட்ட மொழிப் பாடங்களுக்கான கற்பித்தல் நேரம் எவ்விதத்திலும் குறைக்கப்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், கலந்துரையாடலின்போது தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி அமைச்சு நன்றி தெரிவித்துள்ளது.
அனைத்துப் பள்ளி வகைகளிலும் மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்துவதும், அவர்களின் கற்றல் தேவைகளை உறுதிப்படுத்துவதும் தேசியப் பாடத்திட்ட மறுசீரமைப்பில் தொடர்ந்து முன்னுரிமை பெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக 12 பாடவேளைகளை 10ஆக குறைக்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இக்கண்டனத்தை தொடர்ந்து கல்வியமைச்சு தமிழ்மொழிப் பாட நேரத்தை வழக்கம் நிலை நிறுத்தியது.
இந்நிலையில் கல்வியமைச்சின் இம்முடிவுக்கு டத்தோஸ்ரீ சரவணன், அமைச்சர், துணையமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் கல்வியமைச்சின் இம்முடிவு தமிழுக்கு கிடைத்த வெற்றி என அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2026, 12:31 pm
நெகிரி செம்பிலானில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள 5,883 பணியாளர்கள், 44 ஏஜென்சிகள் தயார் நிலையில் உள்ளன
November 5, 2026, 12:30 pm
கோத்தா லக்சமனாவில் நம்பிக்கை கூட்டணி கொடியை 3 பேர் வீசுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது
November 5, 2026, 12:14 pm
பயிற்சித் திட்டங்களை எச்ஆர்டி கோர்ப் மதிப்பாய்வு செய்கிறது: பங்குதாரர்களின் கருத்துகளை கோருகிறது
November 5, 2026, 11:56 am
மலேசியாவில் 61 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது
November 5, 2026, 10:41 am
