செய்திகள் மலேசியா
அரசுப் பணியில் இந்திய இளைஞர்கள் அதிகளவில் இணைய வேண்டும்; ஜனாசந்திரன் முன்மாதிரியாகத் திகழ்கிறார்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
இந்திய இளைஞர்கள் அதிகளவில் அரசுப் பணிகளில் இணைந்து நாட்டின் நிர்வாகத் துறையில் உயரிய பொறுப்புகளை வகிக்க முன்வர வேண்டும்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனாசந்திரனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
அரசுப் பணியில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஜனசந்திரன், தற்போது நாட்டின் உயரிய நிர்வாகப் பதவிகளில் ஒன்றான முதன்மைத் தரம் III (Utama Turus III) நிலையில் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருவது இந்திய சமூகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
தகுதி, அனுபவம், நேர்மை, அர்ப்பணிப்பு இருந்தால் அரசுத் துறையில் உயரிய பதவிகளை அடைய முடியும் என்பதற்கு ஜன சந்திரனின் பயணம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு தமிழ் ஊடகவியலாளர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்திருந்த தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனசந்திரன் தற்போது போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் பொறுப்புடன், ரயில்வே சொத்துக் கழகத்தின் இயக்குநர் வாரியத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இதற்கு முன்னர் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியுள்ள அவர்,
ஊரக வளர்ச்சி, வீடமைப்பு, உள்ளாட்சித்துறை, கல்வி மற்றும் நிதி அமைச்சுகள் உள்ளிட்ட பல்வேறு அமைச்சுகளில் முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
இந்திய சமூகத்தின் பங்களிப்பு வணிகம், தொழில்முறைத் துறைகள், தனியார் துறையுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது.
மாறாக அரசுப் பணிகள், தூதரகத் துறை, கொள்கை உருவாக்கம் மற்றும் அரச நிறுவனங்களின் தலைமைத்துவப் பொறுப்புகளிலும் இந்திய இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்.
இதற்காக இந்திய மாணவர்கள், பட்டதாரிகளிடையே அரசுப் பணி குறித்த விழிப்புணர்வு, வழிகாட்டுதல் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
இந்திய இளைஞர்கள் நாட்டின் தொழிலாளர் சக்தியில் ஒரு பகுதியாக இருப்பதுடன், நாட்டின் கொள்கை உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தின் எதிர்காலத் திசையைத் தீர்மானிக்கும் தலைமைத்துவப் பொறுப்புகளிலும் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
திறமை, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி கொண்டவர்களுக்கு நாட்டின் உயரிய அரசுப் பதவிகளை அடைவதற்கான வாய்ப்புகள் திறந்துள்ளன என்பதை ஜனசந்திரனின் சாதனை நிரூபிப்பதாக அமைச்சர் அந்தோனி லோக் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2026, 7:23 pm
டத்தோஸ்ரீ சரவணன் கண்டனம்: தமிழ்மொழிப் பாட நேரத்தை கல்வியமைச்சு நிலை நிறுத்தியது
November 5, 2026, 12:31 pm
நெகிரி செம்பிலானில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள 5,883 பணியாளர்கள், 44 ஏஜென்சிகள் தயார் நிலையில் உள்ளன
November 5, 2026, 12:30 pm
கோத்தா லக்சமனாவில் நம்பிக்கை கூட்டணி கொடியை 3 பேர் வீசுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது
November 5, 2026, 12:14 pm
பயிற்சித் திட்டங்களை எச்ஆர்டி கோர்ப் மதிப்பாய்வு செய்கிறது: பங்குதாரர்களின் கருத்துகளை கோருகிறது
November 5, 2026, 11:56 am
மலேசியாவில் 61 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது
November 5, 2026, 10:41 am
