நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துலக கால்பந்து அரங்கிலிருந்து ரொனால்டோ ஓய்வு

ரியாத்:

அனைத்துலக கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த, புகழ்பெற்ற வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார்.

போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த இவர், தற்போது சவூதி புரோ லீக் கிளப்பான அல் நாசர் மற்றும் போர்த்துகல் தேசிய அணி ஆகியவற்றின் முன்கள வீரராகவும் கேப்டனாகவும் விளையாடி வருகிறார்.
2026 உலகக் கிண்ண தொடருக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், ரொனால்டோவை போர்த்துகல் கால்பந்து கூட்டமைப்பு தொடர்ந்து விளையாட வலியுறுத்தியது.

இதற்கிடையே, போர்த்துகல் அணியின் புதிய பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் உடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக அணி முகாமை விட்டு வெளியேறினார்.

இந்த ஒழுங்கீனச் செயலைக் கண்டித்து, போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் அவர் மீது அவசர ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதுடன், அவரை அணியிலிருந்து தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்துள்ளது.

இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ரொனால்டோ திடீர் ஓய்வை அறிவித்து இருப்பதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset