நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள 5,883 பணியாளர்கள், 44 ஏஜென்சிகள் தயார் நிலையில் உள்ளன

சிரம்பான்:

வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள 44 ஏஜென்சிகளைச் சேர்ந்த மொத்தம் 5,883 பணியாளர்கள் இப்போது தயார் நிலையில் உள்ளனர்.

நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மட் இதனை கூறினார்.

ஆயத்தமாக  தயார் நிலை குழுவின் அதிகாரிகள் செயல்பாட்டில் உள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையை கண்காணித்தல், தகவல் சேகரிப்பு மற்றும் நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அல்சாஃப்னி கூறினார்.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளை கண்காணித்தல், சொத்துக்கள், தளவாடங்கள் தயார்நிலை மற்றும் பணி திட்டமிடல், செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக அணிதிரட்ட முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset