நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒளியை ஏற்றுங்கள், ஒலி வேண்டாம்; 3000 ரிங்கிட்டிற்கு பட்டாசு வெடிக்க வேண்டுமா?: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை

பினாங்கு

பட்டாசு, வான வெடிகளை வெடிப்பதில் தீபாவளியை கொண்டாடும் இந்துக்கள் தாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்து வருகின்றனர்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் பலர் 3000 ரிங்கிட் வரை பட்டாசுகளை வாங்கியிருப்பதை பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதாக அச் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

ஆண்டுக்கு ஒரு முறைதான், ஆனால் 30 நாட்கள் வேலை செய்து சம்பாதித்த 3000 வெள்ளியை ஒரு 10 நிமிட மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்திற்காக செலவு செய்வது நியாயமான செயல் அல்ல.

காலம் காலமாக தீபாவளி முடிந்த பின்னரும் விடியற்காலையிலும், நள்ளிரவிலும் பட்டாசுகளின் சத்தம் பல மீட்டர்களுக்கு அப்பால் கேட்க முடிவதாக  என்.வி.சுப்பாராவ் கூறினார்.

பட்டாசு வெடிப்பதை இனியும் தொடராமல் இயற்கை காற்றை சுவாசிப்போம் என்றார் அவர்.  வெடிகளை வெடித்து காற்றை மாசு படுத்த வேண்டாம் என்று அவர் கூறினார்.

இந்த வெடிகளின் சத்தத்தை கேட்டு பறவைகள், அணில்கள், நமது செல்லப் பிராணிகளான பூனை, நாய்கள்  வீடு திரும்பாமல் பயத்தில் ஒளிந்துக் கொள்ளப் போகின்றன.

நம்முடைய ஒரு நாள் மகிழ்ச்சிக்காக வாயில்லா ஜீவன்களை வதைக்க வேண்டுமா?

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் கருவில் உள்ள சிசுவுக்கும் ஆகாது. 
எனவே, கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளில் இருந்து, விலகி இருப்பது நல்லது.

அதிக ஓசை காரணமாகக் காது கேளாமை, தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வயதானவர்களும்,உடல் நலமில்லாதவர்களும் நடு இரவில் வெடிக்கப்படும் இந்த ஒலி அதிகம் உள்ள பட்டாசுகளால் மேலும் பாதிக்கப்ப்டுவதாக சுப்பாராவ் கூறினார்.

பட்டாசு வெடிப்பது அவரவர் விருப்பம் ஆனால் அந்த செயல் மற்றவர்களுக்கு சிரமத்தையும் தொந்தரவையும் தரக்கூடாது.

காதுகளைப் பாதுகாத்துக் கொள்ள 85 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இதய நோயாளிகள் அதிக ஓசையைக் கேட்பதால் பாதிப்புக்கு ஆளாகலாம்.

இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.

 ஆகவே இதுபோன்ற நச்சுத்தன்மை கொண்ட வெடிகளை வெடித்து காற்றையும், சுற்றுச் சூழலயும்  மாசு படுத்து வேண்டாம் என சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset