செய்திகள் மலேசியா
அமெரிக்க செனட் சபைக்கு முதல் முஸ்லிமின் தேர்தல், இன அரசியலுக்கு எதிரான ஒரு பாடம்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
அமெரிக்க செனட் சபைக்கு முதல் முஸ்லிமாக அப்துல் அல்-சயீத் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டதை, இனப் பாரபட்சத்தையும் மதப் பாகுபாட்டையும் நிராகரிப்பதற்கான ஒரு முக்கியப் பாடமாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.
மிச்சிகனில் அல்-சயீத் பெற்ற வெற்றியை மேற்கோள் காட்டி, பன்முகத்தன்மைக்கான அரசியல் அங்கீகாரம் அதிகரித்து வருவதை அன்வார் வலியுறுத்தினார்.
இது, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களுக்குச் சம வாய்ப்புகளை வழங்குவதில் ஜனநாயகத்தின் பங்கைப் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
இனவெறி உணர்வுகள் மேலோங்கும் போது, முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமூகங்கள் பெரும்பாலும் மோசமாகப் பாதிக்கப்படுவதால், இனவெறியை எதிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க அரசியல் மாதிரியிலிருந்து வேறுபட்ட, வளமான, பல்லின நாடாக மலேசியாவின் தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்தி இருப்பதை அன்வார் சுட்டிக்காட்டினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 5, 2026, 10:57 pm
அனைத்துலக கால்பந்து அரங்கிலிருந்து ரொனால்டோ ஓய்வு
November 5, 2026, 9:30 pm
மலாக்காவில் 21 தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா மூலம் 755,390 ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ ரமணன்
November 5, 2026, 7:23 pm
டத்தோஸ்ரீ சரவணன் கண்டனம்: தமிழ்மொழிப் பாட நேரத்தை கல்வியமைச்சு நிலை நிறுத்தியது
November 5, 2026, 12:31 pm
