நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் 61 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது

கோலாலம்பூர்:

இலக்கவியல் உள்கட்டமைப்பு மேம்பாடு, தரவு மைய வளாக விரிவாக்கம் மற்றும் சுத்தமான எரிசக்தி மற்றும் நீர் வழங்கல் முயற்சிகளை உள்ளடக்கிய இரண்டு வருட காலப்பகுதியில் 2027 ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவில் 61.1 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.

2027 முதல் 2028 வரையிலான கட்டுமானப் பணிகள் முழுவதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஆண்டுக்கு சராசரியாக 4.48 பில்லியன் ரிங்கிட் முதலீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் ஆல்பபெட்டின் துணை நிறுவனமாகும். அல்பபெட்டின் தலைவரும், தலைமை முதலீட்டு அதிகாரியுமான ரூத் போரட், இன்று, மலேசியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மண்டபத்தில் மலேசியா பெர்சாமா செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் திட்டத்தை அறிவித்தார்.

இந்த முதலீடு, செயல்பாடுகளை பொறுப்புடன் வளர்ப்பதற்கும், பொருளாதாரம் மற்றும் மக்களுக்கு நீண்ட கால பலன்களை வழங்குவதற்கும் கூகுளின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று போரட் கூறினார்.

இந்த முதலீடு மலேசியாவின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஏற்ப உள்ளது, புதுமையின் பலன்களை நாடு முழுவதும் அனுபவிக்கும் வகையில் அடிப்படைக் கணினித் திறனை வழங்குவதன் மூலம், உள்ளூர் ஆற்றல் மற்றும் நீர் வளங்களை நாங்கள் விரிவுபடுத்துகிறோம்.

சமூக மட்டத்தில், கூகுள் உள்ளூர் சப்ளையர்களுடன் இணைந்து அவர்களின் நிபுணத்துவத்தை வளர்த்து, தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரை அதிக தேவை உள்ள திறன்களுடன் சித்தப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.

இதன் மூலம் மலேசியர்கள் இந்த கம்ப்யூட்டிங் திறனால் உருவாக்கப்பட்ட புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset