செய்திகள் மலேசியா
தீபாவளியை முன்னிட்டு 50% டோல் கட்டணத் தள்ளுபடி
கோலாலம்பூர்:
வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு, நாளை முதல் இரண்டு நாட்களுக்கு 50% டோல் கட்டணத் தள்ளுபடியை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று நவம்பர் இரவு 12 மணி முதல் நவம்பர் 7 சனிக்கிழமை இரவு 11.59 மணி வரை இந்தத் தள்ளுபடி அமலில் இருக்கும் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
அனைத்து டோல் சாவடிகளிலும் வகுப்பு 1 தனியார் வாகனங்களுக்கும், பினாங்கு பாலத்தில் வகுப்பு 2 வாகனங்களுக்கும் இந்தத் தள்ளுபடி பொருந்தும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் இதில் தேசிய எல்லையில் உள்ள டோல் சாவடிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் கட்டிட டோல் பிளாசா, இரண்டாவது மலேசியா-சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் (லிங்கேடுவா) உள்ள தஞ்சோங் குபாங் டோல் பிளாசா இதில் அடங்கும்.
இந்த கட்டணத் தள்ளுபடியை வழங்குவது நெடுஞ்சாலைச் சலுகை நிறுவனத்திற்கு 20.11 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு செலுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது போக்குவரத்து தரவு சரிபார்ப்புக்கு உட்பட்டு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்து சமூகம் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதைத் தவிர, இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் மக்களின் சுமையைக் குறைக்க உதவும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்று நந்தா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2026, 7:23 pm
டத்தோஸ்ரீ சரவணன் கண்டனம்: தமிழ்மொழிப் பாட நேரத்தை கல்வியமைச்சு நிலை நிறுத்தியது
November 5, 2026, 12:31 pm
நெகிரி செம்பிலானில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள 5,883 பணியாளர்கள், 44 ஏஜென்சிகள் தயார் நிலையில் உள்ளன
November 5, 2026, 12:30 pm
கோத்தா லக்சமனாவில் நம்பிக்கை கூட்டணி கொடியை 3 பேர் வீசுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது
November 5, 2026, 12:14 pm
பயிற்சித் திட்டங்களை எச்ஆர்டி கோர்ப் மதிப்பாய்வு செய்கிறது: பங்குதாரர்களின் கருத்துகளை கோருகிறது
November 5, 2026, 11:56 am
